நாபா.மீரா/பார்வை

அந்தப் பொண்ணு என்னையே வெறிச்சு வெறிச்சுப் பார்க்குது பாருடா…. ஐயாவோட பர்சனாலிட்டி அப்படி….காலரை உயர்த்திப் பெருமை பேசிய நண்பன் நவீனை முறைத்தான் கவின்.
கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக மெரீனா கடற்கரை சாலையில் … மாலை நேரம் கடற்கரையில் சிறிதுநேரம் இவர்கள் நடை பயின்று திரும்பும் நேரம்…அந்தப் பக்கமாக வரும் அந்தப் பெண் இவர்களையே பார்த்தபடி நிற்க…
நவீனு அந்தப் பொண்ணு உன்னைப் பார்த்து கையசைக்கற மாதிரி இருக்குடா…
நான்தான் சொன்னேனே.. அதுக்கு என் மேல் ஒரு கண்ணு…,
இருவரும் அந்தப் பெண் அருகில் செல்ல… வணக்கம் சார். கொஞ்சம் ரோடு கிராஸ் பண்ண உதவ முடியுமா?
சாயங்காலம் ஆனா எனக்குப் பார்வை கொஞ்சம் மங்கலாயிடும்… நீங்க பார்க்க டீசன்டா இருக்கீங்க…. அதான்…
சமைந்து நின்ற நண்பனை சற்றே நகர்த்தி விட்டு அந்தப் பெண் சாலையைக் கடக்க உதவினான் கவின்.