
கல்லூரி வாழ்க்கை என்று நாம் இருந்த நாட்களில்.
என் மகிழ்ச்சி உன் மகிழ்ச்சி என்று நாம் இருந்த காலத்தில்.
விடியற்காலை வெள்ளி முளைக்கும் நேரம்.
நான் எழும் முன் காத்திருக்கும் உன் குறுஞ்செய்தி !!
என்னை மகிழ்வித்து அதனால் நீயும் மகிழ என்று.
மறக்காமல் நீ அனுப்பும் இனிய காலை செய்தி
அது ஒரு பொற்காலம்.
நான் உனக்காகவும் நீ எனக்காகவும் வாழ்ந்திருந்த காலம் !!
இன்றோ நாம் எந்திரமாக மாறிவிட்டோம்.
நான் ஒரு திசையில் நீ ஒரு திசையில்.
விடியற்காலை வெள்ளி முளைக்கும் நேரம்.
இன்றும் நீ அனுப்புகிறாய் ஒரு குறுஞ்செய்தி. !!
எனக்கும் தெரியும் உனக்கும்தெரியும்.
அது நான் வருந்தாமல் இருக்க என நீ அனுப்பும் செய்தி.
நாளை வரும் ஒரு காலத்தில்
நீ உணர்வாய் ஒரு உண்மையை !!
மகிழ்ச்சி தருவது என்பது வேறு.
வருந்தாமல் இருக்க செய்வது வேறு என்பதுவும்.
தினந்தோறும் எந்திரமாக நீ அனுப்பும் குறுஞ்செய்தி.
அது என்னைப் பொருத்தவரை ஒரு வெறும் செய்தி ஆனதையும்!!*
