
சே . இவ்வளவு மோசமானவனா என் கணவன் ?
பவித்ராவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது .
விஷயம் இவ்வளவுதான் . அண்மையில் பாண்டிச்சேரி செல்லும்போது , பேருந்து நிலையத்தில் ஆதரவின்றி நின்ற ஜூலியைப் பார்த்தாள் . அவள் ஒட்டுப் போட்ட உடையையும் , ஒற்றைக் கண் பார்வையையும் பார்த்து , ஏற்கெனவே இரக்க குணம் படைத்த பவித்ரா , வீட்டுக்கே அழைத்து வந்து , வீட்டில் ஒருத்தியாய் அவளையும் பார்த்துக் கொள்ள ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது .
அவள் கணவன் ஜூலியிடம் , “ஹேட் யுவர் லஞ்ச் ? ஹாவ் யு ஸ்லெப்ட்?” என்றெல்லாம் விசாரித்து , அதிக பட்சக் கரிசனம் காட்டுவதைக் காணச் சகிக்கவில்லை . அது மட்டுமின்றி, அடிக்கடி தனியாகச் சென்று , யாரிடமோ போனில் பேசி வருவதன் காரணம் புரியவில்லை .
அன்று வீட்டில் இவள் இல்லை என்ற துணிவில் , லேண்ட் லைன் போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான் .
அந்தப் போனுக்கு மாடி ரூமில் , இணை இணைப்பு இருந்ததால் சத்தம் போடாமல் மாடியறைக்குச் சென்று , அவன் பேசுவதை ஒட்டுக் கேட்டவளுக்கு இன்ப அதிர்ச்சி !
“ஆமாம் அக்கா ! நம்ம அப்பாவுக்குப் பாண்டிச்சேரியில் ஒரு அயல் நாட்டு பெண் காதலி இருந்ததையும் , அந்தப் பெண்ணைச் சூழலால் பிரிந்து , தொடர்பு இல்லாமல் போய் , எங்கு அவள் இருக்கிறாள் என்றே கண்டுபிடிக்க முடியாமல் போனதையும் சொல்லி , அப்பா இறந்ததும், அம்மா அவள் போட்டோவைக் காண்பித்ததையும் இந்தப் பெண் ஜூலியைப் போலவே அவள் இருப்பதால் , இந்தப் பெண் மேல் எனக்கு இனம் புரியாத பாசம் வருவதால் , ஒரு வேளை இவள் நமக்குச் சகோதரியாக இருப்பாளோ என்ற சந்தேகத்தில் அப்பாவின் பழைய நண்பர்களிடமும் பவித்ராவுக்குத் தெரியாமல் விசாரித்ததையும் , பவித்ராவிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறேன் …நீ ஒரு முறை இங்கு வாயேன் . ஜூலியிடம் விசாரிக்கலாம். நான் ஜூலியிடம் பேசினால் பவித்ரா தவறாக நினைப்பாள் ,” என்றான்.

Very nice
நன்றி
Short, crisp story. 👍👍
நன்றி சகோதரி
நன்றி சகோதரி
Interesting story
நன்றி அனு
வித்தியாசமான கதை
நன்றி அக்கா
உங்க கற்பனைக் குதிரை நாலு கால் பாய்ச்சல்ல உலகையே சுற்றி வரும் போல இருக்கு. வித்தியாசமான கதைக் கரு. நல்ல எழுத்து நடை. வாழ்த்துகள்.
நன்றி சகோதரரே
வித்தியாசமான கதை ..சின்னக் கதை என்றாலும் சுவாரஸ்யம்..அருமை சகோதரி ..