நாபா.மீரா/விழிகளில் ஒரு வானவில்

கசுவா கிராமம். அந்த அரசுப்பள்ளி விழாக்கோலம் பூண்டிருந்தது. குழந்தைகள் தின சிறப்புப் போட்டியாக ‘நீவீர் ரசித்த பண்டிகை’ குறித்து ஒரு படம் வரையவும்…
குழந்தைகள் அவர்கள் கை வண்ணத்தில் அழகழகாய் படங்கள் வரைந்து குவித்தனர்.
புகழ்பெற்ற ஓவியர் எழிலன் நடுவராக அழைக்கப்பட்டிருந்தார்.
வண்ணங்கள் ஆங்காங்கே தீட்டப்பட்ட அந்தப்படம் அவரைக் கவர்ந்தது. சிறுவனிடம் படம் பற்றி விசாரிக்க…
டெய்லர் கடையில காஜா கட்டுற வேலை எங்கப்பாருக்கு….தையலுக்கு வந்திருந்த துணியெல்லாம் ஒட்டுப்போட்டு எனக்கு இந்த வருஷ தீபாவளிக்கு சட்டை தைச்சுக் கொடுத்தார் ஐயா….இனி எத்தனை தீபாவளி வந்தாலும் இது என்னால மறக்கவே முடியாது…
அவன் கண்களில் அத்துணை பரவசம்.. அந்த மாணவனுக்குத்தான் முதல் பரிசு என்று நான் சொல்ல வேண்டுமா என்ன ?

வசந்தா கோவிந்தராஜன்/தர்மக்கணக்கு – விருட்சம் நாளிதழ்

4 Comments on “நாபா.மீரா/விழிகளில் ஒரு வானவில்”

Comments are closed.