உஷா சங்கரநாராயணன்/வீரம்

வீல் என்ற சத்தம் கேட்டு சுஜாவை தட்டி எழுப்பினாள் அம்மா.
“எதுக்கு கத்தறே! என்ன கனவு?” என்றாள்.
ஒருத்தர் வந்தா ஒரு கத்தி வச்சு குத்திடுவோம்னு பையில் வச்சிருந்தேன்மா. ட்யூஷன் போய்ட்டு வந்துட்டிருந்தேனா… நாலு பேரு வந்துட்டாய்ங்க.
அங்க இங்க ஓட முடியல. கத்திய வச்சு நாலு பேரையும் சர மாரியா குத்திட்டேன் மா.
ஒடிட்டாய்ங்க. அப்புறம்தான் கையில் கத்தியப் பார்த்தேன் பயத்துல அலறிட்டேன்.
தப்பு செஞ்சுட்டேனாமா?” என்றவளிடம் “இல்ல. கனவுல வந்த வீரம் நிஜத்துல இருக்கட்டும். எங்க போனாலும் போலீஸ் ஆப்புல லொகேஷன் ஷேர் பண்ணு. அதான் உனக்கு கத்தி” என்றாள் அம்மா.

10/12/25