
சுட்டிப் பெண் உஷா எப்போதும் எதையாவது வரைந்த வண்ணம் இருப்பதைப் பார்த்து அவள் அம்மா முகம் சுழிப்பாள். படிப்பில் கவனம் செலுத்தாமல் எப்போதும் படம் வரைகிறாள் என்று தன் கணவனிடம் ஒரே புலம்பல்.
அன்று பள்ளியிலிருந்து திரும்பிய உஷா மகிழ்ச்சியுடன் ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு தன் கையில் உள்ள பரிசைக் காண்பித்தாள். அவள் வரைந்த ஓவியத்திற்கு ஒரு சான்றிதழும், ஒரு புத்தகமும் முதல் பரிசாக கிடைத்தது. அம்மாவும் தன் மகளின் திறமையை அங்கீகரிக்கும் விதம் அவளை அன்புடன் அணைத்துக் கொண்டாள்.
10/12/2025
