
“எதற்கு பச்சை ட்ரெஸ் போட்டு கூந்தலால் உடம்பைக் கட்டி இருப்பதுபோல ஃபோட்டோ எடுக்கச் சொல்றே?”
பெண்கள் பத்திரிகையில் பெண் விடுதலைக் கட்டுரைகள் எழுதுகிறாள் ரத்திகா.
“ஒரு குறியீடுதான் சதீஷ். பெண்களுக்கு தன் அழகை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று நினைப்பதுதான் பலவீனம். அதேபோல பெண்களின் மனதை பார்க்காமல் உடல் அழகை மட்டும் ரசிப்பது தான் ஆண்களின் குணம். இந்தக் கட்டை அவர்களே அறுக்க வேண்டும் என்பதை ஒரு குறியீடாக கொண்டு தான் ஃபோட்டோ எடுக்க சொல்கிறேன். இதை வைத்து ஒரு ஆர்ட்டிக்கிள் எழுதப்போகிறேன். அதுதான் இப்படி போட்டோ எடுக்கச் சொன்னேன்” என்றாள் ரத்திகா.

நான்கு வரிகளில் ஒரு அழகான கதை ! 👍
மிக்க நன்றி.