
உலக அரங்கில் இன்று இந்தியா பெரும் இடத்தில் இருக்கின்றது, உலகின் மூன்றாம் சக்தியான நாடு என எழுந்து நிற்கின்றது இதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று சோவியத்தின் வீழ்ச்சி, சோவியத் இன்றும் வலுவாக இருந்திருந்தால் இந்தியாவின் இந்த வளர்ச்சி சாத்தியமில்லை, ஒரு சர்வாதிகாரி கையில் சிக்கி தேசம் இன்னும் நாசமாகியிருக்குமே தவிர இந்த வளர்ச்சி இல்லை
மிக முக்கியமாக அயோத்தி முதலான ஆலயங்களுமில்லை, அயோத்தி ஆலயம் சோவியத் வீழ்ச்சிக்கு பின்பே எழ ஆரம்பித்தது என்பது ரகசியல்ல இதுதான் உலக அரசியலுக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு, இந்து மதத்துக்குமான தொடர்பு
சோவியத் இந்தியாவினை அப்படி காத்தது இப்படி காத்தது என்பதெல்லாம் ஏற்கமுடியா வாதம், அது இந்தியாவின் நிஜமான நட்புநாடாக இருந்திருந்தால் 1961ல் சீனா இந்தியாவினை தாக்கும்போது அமைதி காத்திருக்காது, உதவியிருக்கும் ஆனால் அப்போது அது சீன நிலைப்பாட்டையே எடுத்தது
இந்தியாவினை தன் ஆயுத சந்தையாக தன் பொருட்களை வாங்கும் சந்தையாக மட்டும் கண்டது ஆனால் தரமான தொழிநுட்பம் எதையும் தரவில்லை ஒரு மாதிரியே நம்மை நடத்திற்று
இப்போது சோவியத் வீழ்ந்து ரஷ்யா எனும் ஒரு நாடு உருவான பின்பே இந்தியாவின் அவசியமும் அருமையும் புரிகின்றது, இன்றைய ரஷ்யா இந்தியா இல்லாமல் தாங்கள் இனி இல்லை என உணர்ந்து, எண்ணெய் வேண்டுமா? எஸ் 500 வேண்டுமா எல்லாம் எடுத்து கொள் என நம்மிடம் பணிகின்றது
உச்சமாக சூ 57 எனும் ஸ்டெல்த் தொழிநுட்ப விமானத்தை இந்தியாவே தயாரிக்கலாம் எந்த நிபந்தனையுமின்றி தூக்கி கொடுக்கின்றோம் என ரஷ்யா அறிவித்திருப்பது உலகையே அதிரவைத்து இப்படியுமா ரஷ்யா இந்தியாவிடம் பணியும் என்ற பெரும் கலக்கத்தை சீனாவுக்கே கொடுத்திருக்கின்றது
சோவியத் இருந்தவரை இது சாத்தியமில்லை, வங்கபோரில் உதவினார்கள் அமெரிக்காவினை மிரட்டினார்கள் என்பதெல்லாம் கம்யூனிஸ்டுகள் இட்ட கட்டுகதை, உண்மையில் அவர்கள் அப்போதும் இந்தியாவுக்கு பெரிதாக உதவில்லை, பழைய ராணுவ குடோனாக நம்மை வைத்திருந்தார்கள்
இப்போது இந்தியா அந்த சோவியத் நாடுகளில் ஒன்றானதும் பலமானதுமான ரஷ்யாவிடம் இருந்து எல்லாவற்றையும் பெற்று கொள்கின்றது நிச்சயம் பழைய சோவியத் இருந்தால் இது வாய்ப்பே இல்லை
இந்த் உலக அரசியல் ஆழமானது
ஆம் சோவியத்தால் இத்தேசம் ஒரு பலவீனமான தேசமாகவே இது அமிழ்த்தபட்டிருந்தது, அதற்கு முதல் காரணம் சோவியத் யூனியன் அது அஞ்ச காரணம் இந்தியாவின் பெரும் நிலமும் வளமையும் மகாமுக்கியமாக மக்கள் தொகையும்
இன்று இந்தியா எழுந்து நிற்க பல காரணம் உண்டென்றாலும், மகா முக்கிய காரணம் சோவியத் என மிரட்டி கொண்டிருந்த கொடும் அமைப்பு சிதறிபோனது.
ஆம், 1917க்கு முன்பே இந்திய சுதந்திரம் சாத்தியமாயிருந்தால் இத்தேசம் பிரிந்திருக்காது இரண்டு மூன்று துண்டாக சிதறியிருக்காது , காஷ்மீரும் இப்படி சிதைந்திருக்காது
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் எக்காலமும் போர் இல்லை எனும் பாரம்பரிய வரலாறும் தொடர்ந்திருக்கும்
அமெரிக்க எழுச்சி ஒரு பக்கம் உலகை குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்தியத்தை பாதித்தது என்றால் சோவியத்தின் எழுச்சி கடுமையாக இந்தியாவினை பாதித்தது
சோவியத்தை அதன் காலடியில் எதிர்க்க ஒரு தளம் வேண்டும் என்ற கோணத்தில் சுமார் 70 நாட்களில் இந்தியாவினை கீறி உருவாக்கபட்ட தேசம் பாகிஸ்தான்
அதை தொடர்ந்த் தேசம் சந்தித்த சிக்கல் ஏராளம்
இந்த சிக்கல் மதரீதியாக கொள்கை ரீதியாக பாதுகாப்பு ரீதியாக பல சிக்கலை கொடுத்தாலும் அதை தாண்டி பொருளாதாரம் சர்வதேசம் என பல சிக்கலை கொடுத்தது
எதற்காக பாகிஸ்தான் உருவாக்கபட்டதோ அதற்குள் அமெரிக்காவும் பிரிட்டனும் புகுந்து குழப்ப இந்தியாவினை தன் கட்டுபாட்டில் கொண்டுவந்தது சோவியத் யூனியன்
அது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் விரோதம் வந்த நாட்களில் சீன சார்பைத்தான் எடுத்தது, இந்தியாவினை அது வளரவிடவுமிலை சுயாதீனமாக இயங்க விடவுமில்லை
இந்தியாவில் கம்யூனிச சங்கமும் இன்னும் பல புரட்சி அமைப்பு வரவும் அது இந்து உணர்வை குழப்பியும் வைத்ததில் சோவியத் கரமும் இருந்தது
தமிழக நாத்திக திராவிட கோஷ்டிகளுக்கு கொள்கை ரீதியாக எல்லா வழங்கலும் அங்கிருந்துதான் வந்தது, ராம்சாமி அண்ணா பேசிய பேச்செல்லாம் அந்த சோவியத் கிறிஸ்துவத்தை பேசிய பேச்சின் தழுவல்
ஒரே மாற்றம் கிறிஸ்தவம் இருந்த இடத்தில் இந்துமதம்
இப்படி இந்தியாவின் கைகளை கட்டிய சோவியத் போரில் இந்தியா வெல்லும்பொழுதெல்லாம் கடுமைகாட்ட தவறவில்லை
சாஸ்திரியின் மரணம், வங்கபோருக்கு பின்னும் இந்தியா காஷ்மீரை கைபற்ற தடை என அது இந்திய வளர்ச்சியில் கடுமைகாட்டியது
இந்தியா இந்துநாடாக ஆக கூடாது என்பதிலும் அது குழப்பமான தேசமாக தன் அடிமையாக இருக்கவேண்டும் அந்த மதசார்பற்ற இந்தியா பிரிதொருநாளில் கம்யூனிச பூமியாக தன் கையில் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் விருப்பம்
இதனால் இந்தியாவின் உள் நடந்த பெரும் குழப்பத்தில் அதற்கும் பங்கு இருந்த்து
அப்படிபட்ட சோவியத் உடையும் என்றோ பலமிழக்கும் என்றோ 1970களில் யாரும் கனவு கூட கண்டிருக்க முடியாது
1970களில் சோவியத் உடையும் என்றோ இதே ரஷ்யாவும் உக்ரைனும் மோதும் என்றோ யாரும் கனவு கூட காணவில்லை எந்த தீர்க்கதரிசியோ ஜோசியனோ அதை சொல்லவுமில்லை சொன்னால் இருக்க போவதுமில்லை
இந்திய தேசம் சோவியத்த் கேஜிபி எனும் உளவு அமைப்பின் சோதனை கூடமாகவே இருந்தது, கம்யூனிசம் தொழிற்சங்கம் மானுடம் சமதர்மம் என எல்லா குழப்பத்தையும் செய்தார்கள்
தேசம் குழம்ப என்னென்ன உண்டோ எல்லாம் ரகசியமாக செய்துவைத்தார்கள், பலகலைகழம், தொழிற்சாலை என எங்கும் ஊடுருவி மதசார்பற்ற, சமூகநீதி, புரட்சி, என எல்லா குழப்பங்களையும் விதைத்தார்கள்
இதன் பின்னால் இந்து மத ஒழிப்பும் இந்தியாவினை துண்டாடும் திட்டங்கள் இருந்தன
அப்படிபட்ட சோவியத் 1989ல் உடைய முக்கிய காரணம் மிகையில் கார்ப்பசேவ், அவர் மட்டும் புட்டீன் போல வடகொரிய அதிபரை போல இருந்திருந்தால் சோவியத் உடைந்திருக்காது
சோவியத் கலைப்பே உலகில் மாற்றத்தை கொடுத்தது
அதன் பின்பே பாஜக எழ முடிந்தது, அத்வாணி வாஜ்பாய் மோடி என் அடுத்தடுத்த தலைவர்கள் அதன் பின்பே உருவானார்கள், சோவியத் இருந்தால் இதெல்லாம் சாத்தியமே இல்லை
சோவியத் சரிந்தபின்பே காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் சரிந்து இன்று மண்கட்டையாக நிற்கின்றது
அதன் அருகே சில நிற்கவேண்டியவை நிற்கின்றன, அப்படியான மாற்றம் சோவியத் கலைப்பாலே வந்தது
இன்றுகாணும் பலமான இந்தியா உருவாக சோவியத் கலைப்பு காரணம், அதை செய்தவர் அந்த கோர்ப்பசேவ்
1990ல் சோவியத் கலைப்பு என செய்திவந்து இந்திய கட்சிகள் அரண்டு இனி என்னாகும் என பெரும் ஆரவாரமும் பதற்றமும் ஏற்பட்ட நேரம், உலகம் இனி என்னாகும் என்ற பெரும் கேள்வி எழுந்த நேரம் திருவண்ணாமலையில் ஒரு சாது மெல்ல சிரித்தார்
பின் திடீரென அழுதார்
இந்துஸ்தானில் யாரும் சொல்லாத அல்லதுசொல்ல தயங்கிய வார்த்தையினை திருவண்ணாமலை தெருவோரம் ஒரு பிச்சைக்கார கோலத்தில் இருந்து சொன்னார்
“என் மக்களே , உங்களில் யாராவது ஒருவரால் முடியுமானால் அந்த கோர்ப்பசேவுக்கு இந்த பிச்சைக்காரனின் நன்றியினை தெரிவியங்கள்
உலகுக்கு மிகபெரிய நன்மையினை அவர் செய்திருக்கின்றார் அதைவிட நமக்கு பெரும் உதவி செய்திருக்கின்றார், இந்த பிச்சைக்காரன் அவரை மனமார வாழ்த்துகின்றான்
இந்த பிச்சைக்காரனின் நன்றியினை அவருக்கு தெரிவித்துவிடுங்கள்”
அன்று அந்த பிச்சைக்கார சன்னியாசி சொன்னது யாருக்கும் கேட்கவில்லை, ஆனால் இன்று மோடியின் எழுச்சியில் இந்தியா பலமாகி ரஷ்யாவுக்கு இந்தியா அதிமுக்கிய தேவை , இந்தியா இல்லாவிட்டால் ரஷ்யாவின் எண்ணைக்கு சந்தையில்லை, ஆதரிக்க நாடு இல்லை என நிலமை மாறிவிட்ட பின் இந்திய கை ஓங்கிவிடபின் பலமாக கேட்கின்றது, ரஷ்யா இந்தியாவிடம் பணிந்து தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொட்டும் போது அந்த ஞானி சிரிக்கின்றார்
தன் தாடியினை தடவியபடி கொட்டாங்குச்சி ஏந்தியபடி உரக்க சிரிக்கின்றார்
இந்தியா உலகில் மகா முக்கிய இடம் வகிக்கும் போது கேட்கின்றது, இந்தியா யாரையும் நம்பி இல்லை என உலகம் சொல்லும் போது அந்த சிரிப்பு தேசாபிமானிகளுக்கு கேட்கின்றது
சீனபோரின்போது இந்தியாவினை கைவிட்ட ரஷ்யா, 1965ல் இந்திய பாகிஸ்தான் போருக்கு நடுநிலை என சாஸ்திரியின் மர்ம மரணத்தோடு தன் நரிர்தனத்தை காட்டிய ரஷ்யா, 1971ல் காஷ்மீர் இந்தியாவுக்கு செல்லகூடாது என தடுத்த ரஷ்யா இன்று காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கபட்ட பலமான இந்தியா முன் கைகட்டி நிற்கின்றது
இன்று ரஷ்ய தலைவிதியே இந்தியாவின் கைகளில் இருக்கின்றது
1989ல் கோர்ப்பசேவினை நோக்கி யாருக்கும் கேட்கா வகையில் “இந்த பிச்சைக்காரனின் நன்றியினை அந்த கோர்ப்பசேவுக்கு தெரிவியுங்கள், இந்த பிச்சைக்காரன் அவர் கைகளை பிடித்து நன்றி சொல்ல துடிக்கின்றான்” என அந்த சாமியார் சொல்லியிருக்கலாம்
ஆனால் இன்று அவரின் வார்த்தை மிக சரியாக நினைவு கூறபடுகின்றது
ஒரு இந்துசாமியார் எந்த அளவு இந்த தேசத்தை கவனித்திருக்கின்றார், தாடி வளர்த்த பிச்சைகாரனாக அழுக்கான உடையுடன் (நா)யுடனும் பிளாட்பாரத்திலும் பிச்சை எடுத்தவர் எப்படி உள்நாட்டு வெளிநாட்டு அரசியலை கவனித்திருக்கின்றார் என்றால் அதுதான் யோகம் முழு யோகம், பிரபஞ்சத்தில் கலந்த பெருநிலை
அதைதாண்டி இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் எது மிக அவசியமானது எனும் அந்த தேசபற்று, கண்ணீர் வரவைக்கும் அந்த தேசபக்தி
ரஷ்ய உக்ரைன் போரில் இந்தியாவின் பெருநிலை வலுவாக நிற்கும்பொழுதெல்லாம் அந்த சாதுவும் நினைவுக்கு வருகின்றார்
அவர் “யோகிராம் சுரத்குமார்” எனும் யோகி, மகா யோகி. இந்த தேசத்தையும் இந்துமதத்தினையும் மனமாரா நேசித்து அதற்காவே பிச்சைககரானாக வாழ்ந்த மகா யோகி
நாமும் அந்த யோகியின் வார்த்தைகளை சொல்கின்றோம்
பிரதமர் மோடியும் இன்னபிற பிம்பங்களும் பல ஆசிரமங்களுக்கு செல்லட்டும் அது நல்லது
அப்படியே தேசத்தை முழுக்க நேசித்து, 1989களிலே இனி தேசம் வாழும் என்பதை உணர்ந்து அழுக்கு பிச்சைக்கார கோலத்திலும் திருவண்ணாமலை தெருவில் இருந்து மாஸ்கோவில் இருந்த கோர்ப்பசேவுக்கு இந்தியனாய் இந்துவாய் நன்றி சொல்லி உருகிய அந்த யோகிராம் சுரத்குமார் வாழ்ந்த இடத்துக்கும் ஒருமுறை செல்லட்டும், செல்லவேண்டும்
அதுதான் இந்துவாக நின்ற அந்த சுத்தமான இந்து யோகிக்கு தேசம் காட்டும் மிகபெரிய அங்கீகாரம்
இங்கிருந்துதான் ஒரு பிச்சைக்காரன் 1989லே வளமான இந்தியாவினை பலமான இந்தியாவினை ரஷ்யாவுக்கே நியாயம் சொல்லும் இந்தியாவினை கனவு கண்டு கண்ணீரோடு கைதட்டினான் என்பதை உலகுக்கு சொல்ல வேண்டியது அவர்கள் கடமை
கோடீஸ்வர ஆஸ்ரம சாமிகளை கொண்டாடும் நேரம் இந்த தேசாபிமான பிச்சைக்கார ஞானியினை மறக்கவும் கூடாது,
அந்த பிச்சைக்காரன் செய்த தவமும் அவன் விதைத்த ஞான விதைகளும் மிக பலமானவை இந்த தேசத்தின் எதிர்காலத்துக்கானவை, எக்காலமும் இந்த தேசத்தை தாங்கி நிற்கும் விழுதுகளாக நிலைபெற்றுவிட்டவை
காசியினை விட்டு திருவண்ணாமலைக்கு வந்து அமர்ந்து, காசிக்கு அடுத்து மேம்படுத்தவேண்டிய தலம் இந்த திருவண்ணாமலை என அன்றே தவமிருந்து காட்டிய அந்த மகான் எக்காலமும் நன்றிகுரியவர்
