சுஸ்ரீ/அன்பளிப்பு

“ஏன் இப்படி எல்லாரும் சோந்து போயிருக்கீங்க?நம்ம குடும்ப படத்தை போஸ்டராப் போட்டே
எதிர் கட்சிக்காரன் ஓட்டு சேகரிக்கறான்.”
குணசேகரனின் கூச்சலைக் கேட்டு அவர் மனைவி,”தெருவுல போற மாடு கூட உங்க படம் போட்ட போஸ்டரை கடிச்சு குதறரதைப் பாத்தா பயமா இருக்கு, இந்த தடவை ஜெயிப்பீங்களா, தோத்துட்டா தெருவுல நடக்க முடியாது.இப்பவே என் காது பட சொல்றாங்க லஞ்சப் பிசாசோட பிசாசிணி போறதைப் பாருடா, இன்னும் ஒரு மாசம்தான்னு”
“நீங்க எல்லாருமே இப்படி தோல்வியை முன் கூட்டியே ஒத்துக்கற மாதிரி சோந்து போனா எவன் ஓட்டுப் போடுவான்.சம்பாதிக்க துப்பில்லாதவன்தான் நாம வாங்கற அன்பளிப்பை வஞ்சம்ன்னுவான்.
நானும்தான் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபா கொடுக்க பிளான் பண்ணி இருக்கேன்.இதுவும் அன்பளிப்புதானே!”

One Comment on “சுஸ்ரீ/அன்பளிப்பு”

Comments are closed.