அப்புசிவா/உயிரி

வயிறு வலிக்குது அப்பா” என்றாள் சின்ன மகள்
.

“எனக்கும்” என்றான் அவளைவிட சின்னவன்.

எதுவும் சொல்லாமல் மயங்கிக்கிடந்தது கைக்குழந்தை.

அவனின் குழந்தையை ஒத்திருக்கும் அம்மாவும் மயங்கியிருந்தார்.

“எத்தனை நாள் அடைபட்டிருக்க வேண்டும்? எதனால்?” கேட்டாள் மனைவி.

“யாருக்குமே தெரியாதே” என்றான் கணவன்
.

“நாமென்ன தீவிரவாதம் செய்தோம்?” அவள்.

“பிறந்ததே தீவிரவாதம் தானே” அவன்.

“வெளியே நாய்கள்கூட சுதந்திரமாக விளையாடுகிறதே?” கேட்டாள் மகள்.

“அவை மனிதனாக பிறக்கவில்லையே” என்றான் அவன்.

சுபஸ்ரீ/அன்பளிப்பு – விருட்சம் நாளிதழ்