முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/தர்ம தரிசனம்

சின்னையனுக்கு ரொம்ப நாள் ஆசை! குடும்பத்துடன் அந்தக் கோவிலுக்குப் போகவேண்டும் என்று.இத்தனை நாள் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டிச் சேர்த்து வைத்த பணம், குஞ்சு குளுவான்கள் , மனைவியுடன் இரயில் பயணத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.சாமியை விரைவு தரிசனத்தில் உடனே பார்க்க , நிறைய காசு வேண்டுமாம்.
தலைக்கு ஐநூறு ரூபாய் செலவழித்தால் கொஞ்சம் சீக்கிரமாகக் கடவுளைப் பார்க்கலாம்.ஆனால் அவனிடம் பணம் இல்லாததால் தர்ம தரிசனத்திற்கான வரிசையில் குடும்பத்துடன் நின்றான்.
யாரோ ஒரு வி.வி.ஐ.பி.வரப் போகிறாராம்.
சாதாரண நாட்களிலேயே பல மணி நேரம் நிற்க வேண்டிய தர்மதரிசனத்திற்கு அன்று அந்த வி.வி.ஐ
பி வரவால், சில நாட்கள் கூட ஆகலாம் என்ற நிலை.
கடைசிக் கைக்குழந்தை வேறு அழுது கொண்டே இருந்தது. நடக்கும் வயதிலிருந்த குழந்தைகள் வரிசையில் நின்ற அலுப்பு காரணமாக சுருண்டு படுத்து விட்டனர்.பசி வேறு மனைவி முடிந்தவரை சமாளித்துக் கொண்டே இருந்தாள். அவ்வப்போது, தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு, தன்னைக் குழந்தைகளுடன் உள்ளேயும் போகமுடியாமல், வெளியேயும் போக முடியாமல் சிக்க வைத்திருக்கும் கணவன் மேல் எரிந்து விழுந்தாள் .*காசில்லாதவர்கள் ஆசைப் படலாமா?” என்று அவனைக் கடித்தாள்.அவள் கஷ்டம் புரிந்த சின்னய்யன், அந்தக் கோயிலில் குடிகொண்டுள்ள கடவுளையே மனதில் நிறுத்தி, தரிசனம் தரும்படி வேண்டிக் கொண்டான்.
அவர்களின் அவல நிலையைப் பார்த்த அங்கு தென்பட்ட புகைப்படக்காரன் அவர்களை போட்டோ எடுத்தான். அது ஒரு கலைப் படைப்பாக மாறிவிட்டது. திடீரென ஒரு சலசலப்பு!வட இந்தியாவிலிருந்துவரவிருக்கும் வி.வி.விஐ.பி, கொலை மிரட்டல் அச்சம் காரணமாக, அந்தக் கோவிலுக்கு வரவில்லையாம்.
அடுத்த சில மணி நேரங்களில் குடும்பத்துடன் கடவுளைத் தரிசனம் செய்த சின்னய்யன் , கடவுள் கருணையை எண்ணி வியந்தான்.

அப்புசிவா/உயிரி – விருட்சம் நாளிதழ்

3 Comments on “முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/தர்ம தரிசனம்”

Comments are closed.