
பணத்துக்கு என்ன செய்வது என்று விழித்தான் பத்மநாபன். இன்னும் ₹ 50000 ஆவது வேண்டும். வேறு வழியில்லை ரமணனிடம் போய் நிற்க வேண்டும். அவனிடம் ஏற்கனவே கடன் வாங்கியிருந்தான்.
பெண் கல்யாணத்திற்கு. ₹ 50000 கிடைக்காவிட்டால் கல்யாணம் நின்று போனாலும் போய்விடலாம்.
யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு பரண் மீது ஒரு இடத்தில் வைத்திருந்த அந்த மாடர்ன் ஆர்ட் ஓவியத்தை எடுத்துக்கொண்டு ரமணனிடம் ஓடினான். ஐம்பதாயிரம் இல்லை ஒரு லட்சம் கிடைத்தது.
முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/தர்ம தரிசனம் – விருட்சம் நாளிதழ்
