
யாருக்கும் முன் தகவல் கொடுக்க முடியவில்லை
ஏன் கேட்கிறீர்கள்,
அழைப்பிதழ் கூட அடிக்கவில்லை
இன்ன தேதி
இன்ன நாள்
இன்ன நேரம்
என்று சொல்லிக்கொள்ள முடியாதபடி
இழுபட்டுக் கொண்டிருந்தது,
நேற்று பிற்பகல்
நல்லபடி நடந்தேறியது
நல்லோர் எல்லோர் ஆசியுடன்
எதிர்பார்ப்புடன்
உங்கள்
நீண்ட கால விசாரிப்புடன்
காப்பி குடிப்பது
நிறுத்தி விட்டாள்
வாழ்க்கை இணையர்
கொஞ்ச நாளாக என்பதால்
எனக்காக
சிறப்பாகப்
பால் காய்ச்சி முடித்தோம்
பெருமழை வெள்ள நாட்களில்
வெளியேற நேர்ந்த
பழைய மனை மறு புகு விழா
நிறைவேறியது இனிதாக.

Super
ஆண்டு தோறும் வெள்ளமெனில் நொந்து போகுமல்லவா உள்ளம்!
வெள்ளம் உள்புகுவதும், நீங்கள் வெளியேறுவதும்,
வெள்ளம் வெளியேறியதும் நீங்கள் மீண்டும் இல்லம் குடிபுகுவதும் பெருஞ்சோதனையல்லவா?
இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டாமா?
வாழ்த்துக்கள். துன்பங்களைக் கூட இயல்பாக அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். கண்ணுக்குத் தெரியாத சோகமும் இழையோடுகிறது.
மகிழ்ச்சி.