
முதல் நாள் அவளின் செல்ல மகள்
பள்ளிக்குச் சென்றாள் .
திரும்பி வரவும்
பள்ளி வாகனமே ஏற்பாடு.
மகள் நேரத்துக்கு முன்னரே
வாகனம் நிற்கும் இடத்துக்குப்
போய் நின்றாள்
பாவம் குழந்தை முனகினாள்
வண்டி வரும் நேரம்
பரபரப்பு கூடியது
எதோ தெய்வத்தை நினைத்து
கன்னத்தில் போட்டுக் கொண்டாள்
வண்டியும் வந்தது
குழந்தை அதிலேலில்லை
ஓட்டுநரோ அவள்
அதில் ஏறவில்லை என்கிறார்.
துடித்தாள் துவண்டாள்
பரபரத்த நெஞ்சம் படபட அடித்தது
இருசக்கர வாகனத்தில் அவள் கணவன்
செல்ல மகளுடன் வந்து நின்றான்.
அம்மாவுக்கு நம்ப முடியவில்லை
“வீடு திரும்பிய” செல்ல மகளை
அடிக்க கை ஓங்கினாள் கேவலுடன்
அப்பா தடுத்தான்.

கவி(க )தை
அருமை
கவி(க )தை
அற்புதம்
நன்றி