திருப்பாவை பாடல் 21/

திருப்பாவை பாடல் 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக் களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங் களால் போற்றப் படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.

விளக்கம்: மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால், நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். ஆம்…ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை. பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாடலின் உட்கருத்து.


திருவெம்பாவை 21ஆம் பாடல்

(“போற்றி! என் வாழ்முதலாகிய பொருளே!”) என்பது மார்கழி மாதத்தில், சிவபெருமானை “பள்ளி எழுந்தருள” வேண்டிப் பாடப்படும் பதிகம்; இதில், “போற்றி! என் வாழ்முதலாகிய பொருளே! புலர்ந்தது! பூங்கழற்கிணை துணை மலர்கொண்டு ஏற்றி! நின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்! சேற்றிதழ் கமலங்கண் மலரும் தண் வயல் சூழ்ந்த திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!” என, வயல் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானை எழுப்ப, மலர் கொண்டு வழிபடுவதாகப் போற்றிப் பாடப்படுகிறது.
பாடலின் விளக்கம் (தமிழ்த்துளி):
“போற்றி! என் வாழ்முதலாகிய பொருளே!”: போற்றி! என் வாழ்வின் தொடக்கமாகவும், முதன்மையான பொருளாகவும் விளங்கும் சிவபெருமானே!.
“புலர்ந்தது! பூங்கழற்கிணை துணை மலர்கொண்டு ஏற்றி!”: பொழுது புலர்ந்துவிட்டது! உங்கள் அழகிய திருவடிகளுக்கு இணையாக மலர்களைக் கொண்டு அர்ச்சித்து.
“நின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்!”: உங்கள் திருமுகத்தில் எமக்காக மலரும் அழகிய புன்னகையைப் பார்த்து, உங்கள் திருவடிகளைத் தொழுவோம்.
“சேற்றிதழ் கமலங்கண் மலரும் தண் வயல் சூழ்ந்த திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!”: சேற்று இதழ்களையுடைய தாமரை மலர்கள் மலரும் குளிர்ச்சியான வயல்களால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே!.
“ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!”: காளையை ஏந்திய உயர்ந்த கொடியை உடையவனே! என்னை ஆள்பவனே! எம்பெருமானே! பள்ளி எழுந்தருள வேண்டும்.
முக்கியத்துவம்:
திருவெம்பாவை, மாணிக்கவாசகர் அருளிய 20 பாடல்கள் கொண்டது, ஆனால் மார்கழி மாதத்தில் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களுடன் இணைத்துப் பாடப்படும்போது, இது 21ஆம் பாடலாகக் கருதப்படுகிறது.
இது, சிவனை எழுப்பும் பதிகம், மார்கழி மாத விடியற்கால வழிபாட்டில் மிக முக்கியமானது.