விஜயா சுப்ரமணியம்/ ஓட்டல் மெரிடியன்

நேற்று புதிதாக திறந்த ஐந்து நஷத்திர ஓட்டல் மலையடி வாரத்தில்
இருந்த. இந்த ஓட்டலில் சாப்பிட இந்த நான்கு வித்தியாசமான அழகிகளும நுழைகிறார்கள்
முதலில் அவர்களை தடுத்தான். வாசல்லநின்ற ஸென்ட்ரி
“இது உங்களுக்கான ஓட்டல் இல்லை பெரிய அரசியல்வாதிகள் சினிமா. ஸ்டார். வருவார்கள்.
இந்த மாதிரி உடை அணிந்த பெண்களை பார்த்தால் வர மாட்டார்கள் உங்களால் எங்கள் வருமானம் பாதிக்கும்
எந்த ஓட்டலிலும் இந்த. மாதிரி உடை அணிந்தால் தான் சாப்பிட வரலாம்”
அந்த நான்கு பெண்மணிகளும் விடாது சண்டையிட்டார் கள் மானேஜரை கூப்பிடுங்கள் என்று. அந்த நாலு
பெண்களும். கத்தினார்கள் மானேஜரும் வந்தார் அவரும் அவர்களை உள்ளே வர விடவில்ல்
பிறகு முதல் நாளே சண்டை ஆனால் ஓட்டல் பேர் கெட்டு விடும்
அந்த நாலு பெண்களையும். உள்ளே ஒரு மூலையில் அமர வைத்து அவர்கள் கேட்டதை கொடுக்க
சொன்னார். நாலு பெண்களும் சந்தோஷமாக சிரித்து‌ பேசி சாப்பிட்டனர்.
கை அலம்பி விட்டு ஓட்டலை சுற்றி பார்க்க கிளம்பினர்.
தடுத்தார் மானேஜர், பில்லுக்கு பணம் கொடுத்து ‌விட்டு கிளம்புங்கள்”
“நாங்க பில் கொடுக்க மாட்டோம்” என்று சண்டையிடடனர்
அதற்குள் ஓட்டல் ஓனர் யாரோ பெண்கள் சாப்பிட்டு
விட்டு‌ பணம் கொடுக்க மாட்டேன் என்று சண்டையிடுவதாக தகவல் வந்தவுடன்
கோபத்துடன் வந்தார் அந்த நாலு பெண்களை பார்த்தவுடன் முகம் வெளிறி போய் விட்டது.
உடனே மன்னிப்பு கேட்டார். “இந்த ‌ஓட்டலே இந்த மலை
வாழ் மக்களுக்காக தான். இதை‌ கட்டினதே இவர்களுடைய தந்தை தான்
மானேஜரும். ஸென்ட்ரியும் தாங்கள்‌. அவர்கள்
யார் என்று ‌தெரியாமல் பேசியதற்காக மன்னிப்பு கேட்டனர்”
யாரையும் அவர்கள் அணிந்திருக்கும் உடைகளை வைத்து கேவலமாக எடை. போட. கூடாது
நாலு பெண்களும் சந்தோஷமாக ஓடடலை விட்டு வெளியேறினர்