நாபா.மீரா/ஒப்பனை முகங்கள்

பஞ்சாபகேசன் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்.தஞ்சை மண் தருவித்த அவரது விருந்துச் சாப்பாட்டிற்கு ஒவ்வொரு மார்கழி சீசனிலும் கூட்டம் அலைமோதும்.
அது.. எப்படித்தான் உங்களால மாறாம தரத்தையும், ருசியையும் மெயின்டெய்ன் பண்ணமுடியறதோ…. உங்க கைப்பக்குவம் சான்ஸே இல்ல மாமா….
இப்படிச் சொல்லும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சிறு புன்னகை மட்டுமே அவரது பதிலாக இருக்கும்.
இன்று அவருக்கு எண்பது வயது பூர்த்தியாகிறது. விரைவில் ஓய்வு எடுத்துக் கொள்ள இருக்கும் அவர் தங்கள் வாடிக்கையாளர் அனைவருக்கும் சொந்தச் செலவில் இன்று அறுசுவை விருந்து அளிக்கிறார்.
உங்கள் வழியில் அடுத்து யாரும் தயார் செய்து வைத்திருக்கிறீரா என்று ஒரு பெரியவர் கேட்க..,
உள்ளிருந்து நான்கு பெண்மணிகளைப் பெயர் சொல்லி அழைத்தார்…. இரண்டு நடுத்தர வயதுப் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் இருவர்….முகம் சுளிக்க வைக்கும் தோற்றம்….
‘பஞ்சாபகேசன் கிச்சன் ‘ நிர்வாகம்தான் நான்… நீங்கள்லாம் எப்பவுமே சிலாகிச்சுச் சொல்ற கைப்பக்குவமெல்லாம்…இவாதான்.
இந்தப் பொம்மனாட்டிகள்லாம் மனசால அதிரூப சுந்தரிகள்… இவாளுக்கு உங்களோட ஆதரவும், ஆர்டர்களும் கெடைச்சா சந்தோஷப்படுவேன்.

ஸ்ரீராம்/சிறகுகள் விரியும் – விருட்சம் நாளிதழ்