ஸ்ரீராம்/சிறகுகள் விரியும்

“இது என்ன?” என்று கேட்டான் ராகவன்.
சற்றே பெரிய அளவில் அந்தப் படத்தை தயார் செய்து மெருகூட்டிக் கொண்டிருந்தாள் வித்யா.
“இது முகமற்றவர்களின் முகம். எல்லோருக்கும் ஒரே முகம்” என்றாள் வித்யா.
“புரியவில்லை”
“ஒவ்வொரு வீட்டிலும் பெண்ணுக்கு என்று விதம் விதமாக நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ‘இதை நீ செய்யக்கூடாது’, ‘இதை ஒரு பெண் செய்யலாமா?’, ‘பெண்ணாக இருந்து கொண்டு இப்படி செய்யலாமா?’ என்று… கழற்றி எறியப்பட வேண்டிய முகமூடிகள்…. ஆக எங்களுக்கு தனித்தனி முகங்கள் இருப்பதே மறந்து விடுகிறது. பொம்பள சிரிச்சா போச்சு’, அன்னிய ஆண்களிடம் சிரித்து பேசக்கூடாது… சமூகமே எங்களுக்கான கட்டுப்பாடுகள் நிறைந்த சமூகமாகி விட்டது. வேலைக்குப் போனாலும் முழு வெளிச்சம் பெறவில்லை. மேடையில் பேசினாலும் மேலே வர முடியவில்லை. தாலி என்ற பெயரில் கழுத்தை இறுக்கும் தளைகள். அதைக் குறிப்பிடும் வகையில் நாங்கள் ஆரம்பித்துள்ள ஒரு குழுவுக்கான சிம்பல் இது. இனி எங்கள் சிறகுகள் விரியும்… ஒரே முகமாக.. ஒருமுகமாக” என்றாள் வித்யா.

சசிகலா விஸ்வநாதன்/நட்பின் பலம் – விருட்சம் நாளிதழ்

5 Comments on “ஸ்ரீராம்/சிறகுகள் விரியும்”

Comments are closed.