
சாம்பவி , அனுபமா, பார்கவி காமாட்சி இவர்கள் சிறிய வயது முதல் இணைபிரியா தோழிகள்.
பள்ளியிலும் கல்லூரியிலும் ஒன்றாய் படித்தவர்கள்.
எல்லோருமே நல்ல பணியில் இருந்து கைநிறைய ஊதியம் இருந்தாலும்; அன்றாட வாழ்க்கையில் வெறுமை மட்டும் மிஞ்சியிருந்தது
காமாட்சி மூத்தவளாக பிறந்து குடும்ப பாரத்தினால் திருமணம் புரியாமல் தனியே வாழ்ந்து வந்தாள்.
அனுபமாவின் திருமண வாழ்க்கை மலடு என்னும் காரணத்தால் திருமணம் முறிவில் முடிந்திருந்தது.
சற்றே கால் ஒச்சத்துடன் இருக்கும்
சாம்பவி குடிகாரக் கணவனுடன் போராட்டத்தில், இருந்தாள்.
பார்கவி ஒரு விபத்தில் செவிப்புலனை இழந்திருந்ததினால் திருமணம் தட்டிப் போய்க்கொண்டே இருந்தது.
சமூகநல வாரியத்தில் வேலைசெய்யும் காமாட்சிதான் ஒரு யோசனையை முன் வைத்தாள்.
அவர்களின் பெற்றோர் முதலில் இந்த யோசனைக்குப் தயங்கினாலும், தமக்குப் பின் தம் பெண்கள் நிராதரவாக இருக்க மாட்டார்கள்; என்று புரிந்து கொண்டு , அவர்களும் இந்த யோசனைக்கு ஆதரவு அளித்தார்கள்.
உறவினர் எதிர்ப்பு; கூடப்பிறந்தவர்களின் முணுமுணுப்பு’ இவைகளை சமாளித்து;
அவர்கள் நால்வரும் சேர்ந்து ஒரு பெரிதான நான்கு அறைகள் கொண்ட இல்லம் ஒன்றை வாங்கி குடி போய் இன்பமாய் அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து வாழலாயினர்.
இப்போதும் அவர்களைப் பற்றி நான்கு பேர் நான்கு விதமாகத்தான் பேசுகிறார்கள். நட்பின் பலம் கொண்டு நலமாய் அவர்கள் வாழ நாமும் வாழ்த்தலாமே!

One Comment on “சசிகலா விஸ்வநாதன்/நட்பின் பலம்”
Comments are closed.