
- என் பேச்சு
பேச்சு என் கலையானது
அதுவே என் அடையாளமானது.
பேச்சு என் விருப்பமானது
பலருக்கு அது உயர்வு தந்தது.
பேச்சு பல செய்திகள் சொன்னது
அந்தக் குரல் பலரை ஈர்த்தது.
பேச்சு பல இடம் அழைத்துப் போனது
அதனால் என் உலகம் விரிந்தது.
பேச்சு எப்போதும் பெண்களை நோக்கியது
நட்பும்,உறவும் கூட்டமாய்ச் சேர்ந்தது.
நாக்கும் வாக்கும் நல்லதே சொன்னது
கலைமகள் அல்லவோ அப்படிச் செய்தது !!!!
- புத்தகக் கண்காட்சி
பார்க்க வந்தேன் என்று சிலர்
வாங்க வந்தேன் என்றும் சிலர்
புகைப்படம் எடுக்க மற்றும் சிலர்
புன்னகை மட்டும் ஏந்தியும் சிலர்
திடீரென்ற எதிர்பாராத சந்திப்பும் உண்டு
பழைய நாள் சினேகிதம் காணவும் நேர்ந்தது.
சக பதிப்பாளர் சம்பாஷணை சில சமயம்
பிரபலங்களின் தரிசனமும் கொஞ்சம்
ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியும் நிறைவும்
மனிதர்கள் முகம் பார்க்கும் மனசின் குதூகலம்
