அசித்தன்/பட்ட மரம்

மரம் சும்மா இருந்தாலும்
காற்று அதை விடுவதில்லை

துளிராயாய்
இலையாய்
மொக்காய்
பூவாய்
கனியாய்
தானாய் உதிரும்

மரமும்
உதிர்க்கும்

வேர்கள் உள்நோக்கி
ஊடுருவும்
கிளைக்கும்
ஆழமாய் படரும்…

உயிர்ப்பது
வெளியிலா
உள்ளேயா…

மரிப்பதே
உயிர்ப்பதுதானோ