கிரிஜா ராகவன்/முகமூடி

புது ஐ லைனர். ஒருகோட்டிலேயே பட்டையாகக் கோடிட்டது. கண்ணாடிக்கு முன் அமர்ந்து கண்களின் மேலும் கீழும் அழகுபடுத்திக் கொண்டாள் சௌம்யா. பளிச்சிட்ட கண்களைப் படபடவென்று ஒருமுறை சிமிட்டிப் பார்த்தாள் உதட்டுச்சாயத்தை அழுத்தமாய் பூசிக் கொண்டாள். அலங்காரம் முடிந்து அடித்துப்பிடித்து டிராபிக்கில் வண்டியோட்டி அப்பாடா என்று சீட்டில் போய் உட்கார்ந்தாள். அந்தப் பெரிய பேங்க்கில் வாடிக்கையாளர்கள் நுழைய ஆரம்பித்தனர். முகத்தில் புன்முறுவல் குறையாமல். “எஸ் சார், ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ” என்று வேலையைத் தொடர்ந்தாள். இந்த சிரிப்பும், அழகு படுத்திய முகமும் தான், ஒரு வருடத்திற்கு மேல் ஸ்ட்ரோக் வந்து படுத்திருக்கும் கணவரின் மருத்துவச் செலவுக்குப் பணம் சம்பாதித்து கொடுக்கும் முகமூடி என்பது அவளுக்கு மட்டும் தானே தெரியும்.

One Comment on “கிரிஜா ராகவன்/முகமூடி”

  1. புதுமை பெண் படத்தில் ரேவதி தன் கணவரைக்காப்பாற்ற எல்லா கடுமையான வேலைகளை செய்து காப்பாற்றுவது போல,செளம்யா தன் கணவரை காப்பாற்ற போட்டுக் கொண்ட வேஷம் தான் முகமூடி.அருமையான சிறுகதை.

Padma Raghunathan உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன