அதிரடி அதிரா – ஸ்ரீராம்

எனது ஓவியம் என்று சொல்லி ஆபீஸ் ஈவென்ட் நிகழ்ச்சியில் அதிரா கொண்டு வந்து மாட்டிய ஓவியத்தை பார்த்து ஆபீஸில் ஆளுக்கு ஆள் கருத்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் பாடியது, சமைத்துக் கொண்டு வந்தது, பேசியது எல்லாம் புறம் தள்ளப்பட்டன.

அவள் தலைக்கு மேலே இருக்கும் விலங்கு அவள் மேலதிகாரியை குறிக்கிறது என்றும், கீழே உள்ள வேட்டையாடும் பருந்து சக ஆண்களை குறிக்கிறது என்றும் அவள் தோழிகள் கிசுகிசுத்தார்கள்.

கூட வேலை செய்யும் சுதீர் அவளிடமே சென்று விளக்கம் கேட்டான்.

‘தலைக்கு மேல் இருக்கும் அந்த கருஞ்சிறுத்தை என் மூளையை குறிக்கிறது. அடுத்து என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்று பிரச்சனைகளை வேட்டையாடுகிறது. அதற்கான வழிகளை என் கண்களாகவும் காதுகளாகவும் இருக்கும் பருந்து பறந்து பறந்து தேடுகிறது” என்று விளக்கம் கொடுத்தாள் அதிரா.

“மேலும் சுதிர்… எனது ஓவியம் என்றால் நான் வரைந்த ஓவியம் என்றும் பொருள் கொள்ளலாமே… ஏன் என்னோடு சம்பந்தப் படுத்துகிறீர்கள்?” என்றும் கேட்டாள்.

3 Comments on “அதிரடி அதிரா – ஸ்ரீராம்”

  1. எனது ஓவியம் என்றால் நான் வரைந்த ஓவியம் என்றும் பொருள் கொள்ளலாமே//

    சூப்பரான வரி.

    வித்தியாசமாக எழுதியிருக்கீங்க ஸ்ரீராம்

    கீதா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன