கேள்விக்காரன் கவிதை

எங்கு
சென்று விடும்
என் தாய் மொழி

அது என்ன
எவருக்கேனும்
பொறாமைத் தூண்ட
புதையல் பொருளா

பொன்னாபரணமா

எவரும் களவாட
காலச் சுவடியா

சொத்து பத்திரமா
வண்டி வாகனமா

அல்லது

ஹார்மோன் மாற்றத்தில்
குணம் மாறும்
நான் பெற்ற
பிள்ளைகளா

அது என்னோடு
எப்போதும்
எந்த சொல் ஆர்ப்பாட்டமும்
இல்லாமல்
கைத்தறி புடவை
கதர் புடவை
ஆடை தாரியாய்
எளிமை இலச்சினையாய்
என்னுள் என்றென்றும்
எனக்கு உயிரூட்டிய
அம்மனாய்
என்னுள்
சம்மணமிட்டு
குடியிருக்கும்
என் அன்புத் தாயாய்
என்றென்றும்
என்னுடன்
நிரந்தரமாய்..💐🙏🏻

கேள்விக்காரன்…
21/02/26
மாலை மணி:05:36

One Comment on “கேள்விக்காரன் கவிதை”

Comments are closed.