சாந்தி சந்திரசேகரன்/ வெளிச்சத்தை நோக்கி

“படிக்கிறதுக்கு என்ன..? சும்மா மேஜை தேய்க்கவா பள்ளிக்கூடத்துக்கு வர்ற..?” ஆசிரியரின் கோபம் கனலாய் காந்தியது சுமதிக்கு.
குனிந்த தலை நிமிரவே இல்லை.
உடன் பயிலும் பிள்ளைகள் சாதரணமாய் பார்த்ததும் கூட.. எள்ளலாய் இருப்பதாய் சுமதியை உறுத்தியது.
குடித்து வந்து அடிக்கும் தந்தை.. அம்மாவிற்கு உதவ வீட்டு வேலைகள்.. இரவில் மின்சாரம் இல்லாத பல பொழுதுகள்.. இவற்றைக் கடந்து அவள் படிப்பது என்பது அத்தனை எளிதாய் இல்லை.
வீட்டிற்கு வரும் வழியெல்லாம் தன் நிலை கருதி.. கண்ணீர் தாரைதாரையாய் சொட்டினாள்.
வீட்டில் வெளிச்சம் இல்லாததால்.. வாசலில் நின்று அரிசி களைந்த அம்மாவைக் கண்டவுடன் ஓடிச்சென்று இறுகக் கட்டிக்கொண்டாள் சுமதி.
மகளின் தலை கோதிய அன்னையின் கைகளில்.. மகளின் சூடான கண்ணீர் பட.. பிரச்சனை என்றுணர்ந்தாள் தாய்.
ஆனால் அதுயெதுவென கேட்டு தீர்வு சொல்லும் திரணியற்றவள்.. தன் மகளை.. மேலும் இறுக அணைத்துக் கொண்டாள்.
அன்னையின் கதகதப்பான அந்த அணைப்பில்.. மனதிலிருந்த இறுக்கமெல்லாம் எங்கோ காற்றில் மறைய.. மெல்லிதாய் ஒரு புன்னகை ஒன்று குறிஞ்சி மலரென சுமதியின் முகத்தில் அரும்பியது.
அந்த ஒற்றை அணைப்பு.. மறுநாளை எதிர்கொள்ளும் சக்தியை அது அவளுக்கு கொடுத்திருந்தது.
மறைந்து கொண்டிருந்த சூரியன் அவளுக்காக சில கனம் தாமதிக்க.. தன் எதிர்காலத்தின் இருள் அகற்ற.. புத்தகத்தைக் கையில் ஏந்தி வாசலில் அமர்ந்தாள் சுமதி.

One Comment on “சாந்தி சந்திரசேகரன்/ வெளிச்சத்தை நோக்கி”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன