ஸ்ரீராம்/என்னுள்ளில் ஏதோ

தான் ஏதோ ஒன்றைத் தேடுவது போலவும், அது கிடைக்கவில்லை என்றுமே எப்போதும் தோன்றுவது போல இருக்கும் சத்யாவுக்கு.
மற்றவர்களுடன் தாமரை இலை தண்ணீர் போல பழகுவதும், தனக்குள்ளேயே உள்ளுக்குள்ளே ஆழ்ந்து போவதும், மற்றவர்களிடமிருந்து இவளை கொஞ்சம் விலக்கித் தான் வைத்திருந்தது.
உண்பதுவும், கழிப்பதுவும், ஊடுவதும், கூடுவதும், தூங்குவதும் தினசரி செய்கைகளாக… ஏதோ ஒன்றை இழப்பது போல, ஏதோ ஒன்றை அடைவதற்கான வழியை தேடுவது போல மனம் அலையும்.
மற்ற அனைவரும் இந்தத் தினசரி வழக்கங்களில் சந்தோஷமாக இருக்கையில் தான் மட்டும் ஏன் அமைதி இழந்து இருக்கிறோம் என்ற கேள்வி எழும். உடலை மீறிய விஷயங்களில் உணர்வுகளின் லயிப்பு மீட்சியைத் தந்தது. அதனாலேயே அவளின் தனிமை அவளுக்கே பிடித்திருந்தது.
உடல் நிர்வாணத்தை தாண்டி மன நிர்வாணத்திற்காக காத்திருக்கும் ஒரு ஏக்கம் மனதில் எப்போதும்.
எல்லோருடனும் சேர்ந்து இருந்தாலும் தனியாகவே அலையும் மனம்.
தனக்கு இந்த எண்ணம் வந்திருப்பதே ஒரு முயற்சியின், ஒரு புதிய லயிப்பின் அடையாளமாக தோன்றியது.
ஏன் பெரும்பான்மை பக்கம் தான் இல்லை? சத்யாவின் மனம் தன்னைத்தானே கேட்டுக் கொண்டது
உலகாய விஷயங்களிலிருந்து சீக்கிரமே விடுபட்டு விடுவோம் என்ற நம்பிக்கை எழுந்தது உள்ளுக்குள்.

3 Comments on “ஸ்ரீராம்/என்னுள்ளில் ஏதோ”

  1. அருமையாக எழுதியிருக்கீங்க ஸ்ரீராம்

    உள் நோக்கிப் பயணம். தன்னைத்தானே அறிதல்

    மன நிர்வாணம்..சூப்பர். புத்தர் சொல்லும் நிர்வாண நிலையை Nibbana நோக்கி தேடலும் பயணமும் கொண்ட கதாபாத்திரப் படைப்பு ரொம்ப நல்லாருக்கு ஸ்ரீராம்.

    கீதா

Comments are closed.