
நான் சொல்லுறதைக் கொஞ்சம் பொறுமையாக் கேளுடிகீது ….இனியா
மகப்பேறு மருத்துவமனையின் ஆறாம் தளத்திலிருந்து மின் தூக்கி வாயிலாகக்கீழ்த்
தளத்திற்கு இறங்குகையில் தோழியிடம் வாதிட்டாள் மீனலோசனி
தோழி பேசியது காதில் விழுந்தாலும் அமைதி காத்தாள் கீதப்பிரியா. அருகில் அவள் புடவைக் கொசுவத்தைப் பற்றியபடி
சற்றே தெளிவற்ற நிலையில் ஒரு ஐந்து வயதுப் பெண்.
உன் புருசன்… ஏற்கனவே இந்தப் பொண்ண காரணம் காட்டி உன்னை விட்டுப் பிரிஞ்சுட்டான்
இந்த நிலையில் இன்னொரு சுமை தேவையா….. ஆரம்பக்
கட்டம்….கலைக்கிறதுசுலபம்தான்னு அந்த லேடிடாக்டர்
சொன்னதைக் கேட்டேதானே?
திடீரென லிப்ட்தடதடத்து நிற்க…சட்டெனத் தன் அம்மாவை வயிற்றைச் சுற்றிக்
கட்டிக்கொண்டாள் சிறுமி.
சிறிது நேரத்தில் பவர் வந்ததும் லிப்ட் அவர்களைக் கீழ்த் தளத்தில் பக்குவமாக இறக்கிவிட்டது.
சிறுமி பயம் விலகி நகர…மீனு
…ஒரு வகையில் நானும், இந்த லிப்டும்
ஒரே சாதி…. சுமைதாங்கிகள்….நாங்கதாங்கற
சுமைக்கு உரியப் பாதுகாப்பு கொடுத்து….. சரியான நேரத்தில்இறக்கிவிடற
தர்மத்தைக் கடைப்பிடிப்போம்
சிறுமியை இறுகப்பற்றிக் கொண்டு நடந்தாள் கீதப்ரியா
.
.
.
