டெட் கூசர் /இனியதொரு பிறந்தநாள்

தமிழில் : க.மோகனரங்கன்


இன்று மாலை,
திறந்திருந்த ஜன்னலின்
அருகே அமர்ந்து
வெளிச்சம் மறைந்து
இருளின் ஒரு பகுதியாக
அந்தப் புத்தகம் மாறும் வரை படித்துக்கொண்டிருந்தேன்.
எளிதாக ஒரு விளக்கை
என்னால் ஏற்றியிருக்க முடியும்.
ஆனால் தனியே உட்கார்ந்து
வெளிர் சாம்பல் நிறமாக
பேயுருவம் பெற்றுவிட்ட
என் கரத்தால்
படிக்காத மீதப் பக்கங்களை
மிருதுவாக வருடியபடி
இந்த நாளினை
இரவிற்குள் இட்டுச்செல்லவே
நான் விரும்பினேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன