விஜயலட்சுமி கண்ணன் கவிதைகள்

1.மனித யந்திரம்

தூறல் மழை
பெருமழையாகிவிட்டது.
சே!என்ன மழை,இப்படியா?
என்றனர் ஒரு சிலர்.
பனி காலம் வந்தது,
குளிரில் பற்கள் நடனமாடின.
இந்த குளிர் தாங்கவில்லை, என்றும் பலர்.

அருணனுக்கு ரோசம் பொங்கியது.
இனி என் காலம்..
வெயில் சுட்டு எரித்தது.
என்ன கொடுமை என்று வெயிலை வசைபாடினவர்கள் எத்தனையோ!
மனித மனம்
எதிலும் குறை காண விழையும்
அதிசய யந்திரம்.

2.மொழி

மௌனம் ஒரு மொழி தான்.
ஆத்மாவின் மொழி மௌனம்
பரமாத்மாவின் மொழியும் மௌனம்.
சப்தத்தை காட்டிலும்
ஓங்கியது நிசப்தம்.
சொல்லினும் மேல்,
வென்றிடும் மௌனம் சாகசமின்றி.

3.யாதுமாகி நின்றாள்.

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல்

வேண்டும் அம்மா
என்று கவிமணி

தேசிக விநாயகம் பிள்ளை பெண்களை

பெருமை படுத்தியது நம்

மனதில் இன்றும்
பசுமையாக உண்டு.

பெண் அவள் பாச
அரவணைப்பில் .

கட்டுண்டு தன்னைத்தானே மறந்து பணிகிறாள்.

கல்வியில்: கொடிமரம் என உயர்கிறாள்.

சகோதரத்திற்கு
இலக்காகி உலக
சமாதான புறா!

இல்லாள் ஆகி அன்பை
சொரிகிறாள்.

காற்றில் மெல்லிசையாக
காதலில் மூழ்கிறாள்.

நிலவைப் போல குளிர்ந்து
நெருப்பாக

எரித்து கற்புக்கரசி
ஆகி அமர்கிறாள்

மண்ணில் ஒரு
சீதை கண்ணில்

பாவையாகி உலகிற்கு ஒளி காட்டுகிறாள்.

பெண் படித்தால்
குடும்பமே படிக்கும்.

தன்னம்பிக்கையின்
உச்சம் கொள்கிறாள் அவள் .

அன்புக்கு அடிமை
கொடுமைக்கு விரோதி.

அவள் மாபெரும் சக்தியாக நம்முடன்

குலவிளக்கு போல்
எல்லாமும் ஆகிறாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன