
“கணேசா சாயந்தரம் சீக்கிரம் வந்துடு பொண்ணு பாக்கப் போறோம்”அம்மா
என்னவோ 32 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணலை. உற்ற நண்பன் வேலாயுதத்தின் திருமணம் நடந்து 8 வருஷம் இருக்குமா,அழகான பெண்னு ஆசையா கல்யாணம் பண்ணிண்டான் இப்ப பாவம் படற மன வேதனை சொல்லி மாளாது. ஏறக்குறைய மற்ற நண்பர்களின் கதையும் கிட்டத்தட்ட இதுதான். இப்ப அம்மா ,அப்பா, குட்டித் தங்கைன்னு வாழ்க்கைப் படகு சந்தோஷ நதியில் மிதக்கிறது இது சுழலில் சிக்காமல் இருக்கணுமே.
சாயந்தரம் பெண் பாக்க விருப்பமில்லாமல்தான் போனான். வீட்டில் எல்லாருக்கும் அழகிய ரேவதியை பிடித்தது. “பொண்ணு நல்லா இருக்கா இல்லை?இது அம்மா,”அண்ணி ரொம்ப அழகு”தங்கை
அப்பாக்கு நல்ல வேலையில் இருக்கும் வசதியான குடும்பத்து பெண் பிடித்தது.
கணேசன் அனைவருக்கும் முன் சொன்னது,”அம்மா எனக்கு மணப்பெண் கூட துணைக்கு சாப்பாட்டுத் தட்டுகளை சுமந்து வந்த அந்தப் பெண்ணுன்னா சம்மதம்”
“டேய் அது சமையக்காரியோட பொண்ணுடா,ஒரு கண்ணு சுத்தமா சதை மூடி என்ன அழகைக் கண்டே அவ கிட்ட?”
அவனோட பிடிவாதத்தால் அந்த ஒத்தைக் கண் தேவதை மீனா அவன் மனைவியானாள்.மற்ற எல்லா நண்பர்களையும் விட சந்தோஷமான வாழ்க்கை இப்ப.அந்த தேவதை இவனை கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொள்கிறாள், கொண்டாடுகிறாள்,
வேறென்ன வேண்டும்.

One Comment on “சுஸ்ரீ/வேறென்ன வேண்டும்”
Comments are closed.