
அன்று வகுப்பில் உமா டீச்சர் பெரிய ஒரு பெட்டி நிறைய மரத்தாலான சிறிதும் பெரிதுமாக பல வடிவங்கள் , பல வண்ணங்களிலும் கொண்டு வந்தவைகளை , இரண்டு மேஜைகளை ஒன்றாக சேர்த்துப் போட்டு அதன் மேல் பரப்பினாள்.
ரம்யா நான்காவது வகுப்பு படிக்கும் மாணவி.அழகு என்றால் கொள்ளை அழகு.கடவுளுக்கே அவள் அழகைக் கண்டு பொறுக்கவில்லையோ என்னவோ அவளை மற்ற குழந்தைகளிடம் இருந்து மாறுபட்ட
குழந்தையாக படைத்துவிட்டார்.
சிறப்பு குழந்தை என்றாலும் அவளுடைய அம்மா சங்கரி அவளை சாதாரண பள்ளிக்கூடத்தில் மற்ற குழந்தைகளோடு
படிக்க சேர்த்து விட்டாள்.
பார்த்தவுடன் ஆர்வம் பொங்க ரம்யா இரு கைகள் கொண்டு வாரி எடுத்து ஒன்று சேர்க்க ஆரம்பித்தாள்.
“ஆஹா! ரம்யா, இவ்வளவு குறுகிய நேரத்தில் இவ்வளவு அழகாக இந்த பெண்ணின் உருவத்தை சேர்த்துவிட்டாயே!”என்று முதுகில் தட்டிக் கொடுத்து அணைத்து பாராட்டினாள் உமா டீச்சர்.
