பூ.சுப்ரமணியன் /வெறுங்கை                            


             
       அந்த கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாவைக்கூத்து நடைபெற்றது. பாவைக்கூத்தில் இராமாயணக்கதையைக் காண கிராமமக்கள்  ஆர்வமுடன் கூடியிருந்தார்கள்.
         கூத்து நடத்துபவன் ஆண் குரலிலும் பெண் குரலிலும் தோல்ப்பாவையை குரலுக்கு ஏற்றபடி  திரைக்குள்ளிருந்து ஆட்டி ஆட்டி கிளைக் கதையை உணர்ச்சியுடன் கூறிக்கொண்டிருந்தான்.
         குடிகாரன் ஒருவன் தன் மனைவியிடம் வழக்கம்போல் ” ஏ முத்தம்மா நான் தண்ணீ போட காசு கேட்டுட்டு இருக்கேன் நீ தலையை சாய்ச்சு போஸ் குடுத்துட்டு உட்கார்ந்து இருக்கே” என்று கத்தினான்.
          முத்தம்மாள் ” எங்கிட்ட காசு ஒண்ணும் இல்ல.  என்னோட கைய வேணும்ன்னா வந்து பார்” என்று கூறிக்கொண்டே ஒரு உள்ளங்கை விரித்து மற்றொரு  உள்ளங்கையால்  சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் ஆர்வமுடன் கை தட்டினார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன