இனிக்கும் தமிழ் – 58/டி வி ராதாகிருஷ்ணன்

“க கர வருக்கமே முற்றிலும் அமைந்து வருமாறு ஒரு செய்யுளைச் செய்க ” என
புலவர் ஒருவர் காளமேகத்தைக் கேட்க..அவர் பாடிய செய்யுள் ..

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா..

பொருள்-

காக்கைக்கு ஆகா கூகை – காக்கைக்கு கூகை இரவில் வெல்வதற்கு ஆகாது
கூகைக்கு ஆகா காக்கை – கூக்கைக்கு காக்கையை பகலில் வெல்வதற்கு ஆகாது

                       (ஆகையால்)

கோக்கு கூ காக்கைக்கு – அரசனுக்காக அவன் நாட்டை பகைவரிடமிருந்து காப்பாற்றுகைக்கும்
கொக்கு ஒக்கு – கொக்கைப் போலத் தகுதியான சமயம் வரும் வரை காத்திருக்க வேண்டும்
கைக்கைக்கு – பகையை எதிர்த்து
காக்கைக்கு – காப்பாற்றுவதற்கு
கைக்கு ஐக்கு ஆகா _(காலமற்ற காலமாயின்) சாமர்த்தியமுள்ள தலைவனுக்கும்
இல்லாததாகி போய் விடும்.

இந்த செய்யுளைச் சொல்லி விட்டு நம் பொய்யாமொழிப்புலவர் சொன்னதை சொல்லாமல் விடலாமா.


பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது (481)
என்கிறார் ஒரு குறளில்..வேறொன்றில்..
கொக்கொக்க கூம்பும் பருவது மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து (490)

காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்க
வேண்டும்.காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல்
செய்து முடிக்க வேண்டும்.

                           -