
நானே குழந்தையென்றால்
என்னைவிட பெரும் குழந்தையாய்
நடந்து கொள்கிறாய்..
தேவையில்லாமல் சண்டையிடுகிறாய்
குழந்தை எறியும்
பொம்மையைப் போல்
வார்த்தையை எறிகிறாய்..
சுவரில் எதையோ
கிறுக்கிக் கிறுக்கி
அழிக்கும் குழந்தை
போல்
எழுதி எழுதி நீக்குகிறாய்
உனக்குள் முட்டி நிற்கும்
கோமாளித் தனத்தை
எப்படிக்
கடத்துவேன்
Sorry என்ற வார்த்தை தவிர

அருமை