என்றாலும் என்ன?/உமா பாலு

நீ பொய்தான் புனைகிறாய்
என்றாலும் என்ன
மனம் நிறைந்தால் அதை
நிஜம் என்றே நம்புகிறது

நீ நிஜம்தான் சொல்கிறாய்
என்றாலும் என்ன
மனம் நொந்தால் அதை
பொய் என்றே புறந் தள்ளுகிறது.

என்றாலும் என்ன?
எது வேனும் சொல்
ஆயின் மௌனமாய் இராதே


6/12/21

One Comment on “என்றாலும் என்ன?/உமா பாலு”

Comments are closed.