விஜயலக்ஷ்மி கண்ணன் /மாஸ்டர் பிளான்

ஊருக்கு வெளியே மலை அடிவாரத்தில் இருந்த அந்த சிறிய தேநீர் விடுதி முன் காரை நிறுத்தி ராபர்ட் கிளாராவுடன் உள்ளே சென்று ஒரு மூலையில் இருந்த வட்ட மேஜையருகே போட்டிருந்த எதிர் எதிர் நாற்காலிகளில் அமர்ந்தனர்.இந்த இடம் இருவருக்கும் பழக்கப் பட்ட இடம்.
ராசியானதும் கூட.
இவர்களுடைய தொழில்,வியாபாரம் சம்பந்தமாக பெரிய பிளான் கள் இங்கிருந்து உருவாகி,நடத்தி,வெற்றி கண்டதால் இம்முறை அதே மாதிரி பிளான் போட, மூளை சுறு சுறுப்பாக தேநீர் கொண்டு வர சொன்னார்கள்.
நள்ளிரவு.
மிகுந்த ஜாக்கிரதையுடன் செயல்பாடு தொடங்குகிறது. அந்த தனியார் வங்கியின் சிறிய கிளை அடுத்த ATM.
வெள்ளிக்கிழமை என்பதால் இரவு 11.மணிக்கு எல்லாம் பணத்தை மிஷினில் ரொப்பிவிடுவார்கள்.
இயந்திரத்தை உடைத்து பிரித்து பணத்தை அள்ளுவது பழைய பாணி.
இப்பொழுது இயந்திரத்தை அப்படியே அடியோடு பெயர்த்து வண்டியில் ஏற்றி விட்டார்கள்.ஒரு போலி ATM உருவம் மட்டும் அந்த இடத்தில் நிறுத்தி வைத்து வண்டியில் ஏறி விட்டார்கள் ராபர்ட்டூம் அவன் பணியாளும். கிளாரா வண்டியை கிளப்பினாள்.
இம்முறையும் அவர்கள் பிளான் வெற்றியா?அடுத்த நாள் காலை செய்தி தாளில்
“நேற்று நடு ராத்திரியில் வங்கி ATM கொள்ளை.நெடு நாள் கொள்ளையர்கள் பிடிபட்டு கைதாகி உள்ளனர்.”

One Comment on “விஜயலக்ஷ்மி கண்ணன் /மாஸ்டர் பிளான்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன