
திலக் அவளைச் சந்தித்தப்போது, விழியை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் சொன்னாள்: “எனக்கும், உனக்கும் சரியாக வராது. “
அவள் ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டு போனாள்.
- உனக்கு முன் கோபம் ஜாஸ்தி
- எல்லோரையும் அலட்சியப் படுத்துவே
- உன்னுடன் மாட்டிக் கொண்டால் மனைவியின் கருத்துக்கு இடம் கொடுக்க மாட்டாய்
- முக்கியமான விஷயம் உனக்குக் கவிதையை ரசிக்கத் தெரியாது
அவள் எழுந்து விட்டாள். அவளுக்கு வந்த காப்பியைக் குடித்து விட்டு. திகைத்துப்படி இருந்தான் திலக்.

One Comment on “அழகியசிங்கர்/சரியாய் வராது”