இலக்கிய இன்பம் 14

ஒரு எழில் நிறைந்த மங்கை வாவியில் நீராடச் செல்கிறாள். அப்போது இரு கரங்களாலும் தண்ணீரை எடுத்து முகத்தருகே கொண்டு செல்கிறாள். அந்நீரில் இரு கெண்டை மீன்கள் இருப்பதைக் கண்டு அலறி அதை கீழே விடுக்கிறாள். உடனே கெண்டை மீன்களும் மறைந்து விட்டன. தன் விழிகளே கெண்டை போல் தெரிந்தன என உணர்ந்த அம்மங்கை நாணம் கொள்கிறாள்.
விவேக சிந்தாமணியின் இக்காட்சி வருணனை இப்பாடலில்
“தண்டு லாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரைமு கத்தரு கேந்தினாள்
கெண்டை கெண்டையே னக்கரை யேறினாள்
கெண்டை காண்கிலள் நின்றுத யங்கினாள்”.
