ஈவன் போலண்ட்/இக் கணம்

தமிழில் : க.மோகனரங்கன்

ஒரு குடியிருப்புப் பகுதி,

அந்தி சாயும் வேளை.

நிகழ்ந்திடும் பொருட்டு

கண்ணெதிரே,

நட்சத்திரங்களும்

அந்துப்பூச்சிகளும்

பழங்களைச் சுற்றி

போர்த்தியிருக்கும் தோல்களும்

தயாராகிக்கொண்டிருக்கின்றன.

ஆனால் இன்னும்

எதுவும் நிகழவில்லை.

ஒரு மரம் கருப்பாக.

ஒரு ஜன்னல்

வெண்ணெய் போல

மஞ்சளாக இருக்கிறது.

இக் கணத்தில்,

ஒடி வந்து

தன் கையில் விழும்

குழந்தையைப் பிடிக்க

ஒரு பெண் குனிகிறாள்.

நட்சத்திரங்கள் உதிக்கின்றன.

அந்துப்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கின்றன.

ஆப்பிள்கள்

இருளில் பழுக்கின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன