SP ஜெனார்த்தனன்/ உண்மையுடன் ஒருவாழ்வு

முதலில் பெரியசாமித் தூரனைத் தான் போய்ப் பார்த்தேன். அவர் ஸ்வாமியின் படம் போட்ட காலண்டரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, ஸ்வாமியே நேரில் வந்தது போல மகிழ்ந்து, ” இதைத் தவிர வேறு செல்வம் உலகில் என்ன இருக்கிறது? ” என்றார். தமிழின் மீது மிக பற்று கொண்ட அவர், “இம்முறை ஆங்கிலத்தில் நாம் உரையாடுவோம்” என்றார். பக்கத்திலிருப்பவர்களுக்கு நாங்கள் பேசுவது புரியக்கூடாது என்பது அவர் நோக்கம். “பக்கவாத நோயால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் தனக்கு முடிவு வெகு அருகில் இருப்பதாகவும், தன்னை. உடனே திருவண்ணாமலை கூட்டிப் போக வேண்டும். ஸ்வாமி ஒருவர் தான் தனது கடைசிக் காலத் துணைவன், கடைசி வரை ஸ்வாமியிடம் இருந்து, அங்கேயை உயிரை விட விருப்பம்” என்றார். “ஸ்வாமியிடம் கேட்டு வந்த பிறகு தான் உங்களைக் கூட்டிப் போக முடியும்” என்று சொல்லி அவரிடம் விடை வாங்கிப் போனேன். ஸ்வாமிக்கு அவர் சொன்ன விபரத்தைத் தபாலில் எழுதிப் போட்டு விட்டேன்.
வர வர எல்லோருக்கும் பஜனை மீது பிடிப்புக் கூடியது. யார் எந்தத் தேதியில் வெளியூர் போயிருந்தாலும், பஜனைத் தேதியில் சிவகாசி வந்துவிடுவார்கள். ஸ்வாமி, “நீங்கள் வருடத்திற்கு 12 பஜனைகள் இராஜதுரை நாடார் நினைவாலயத்தில் பண்ணுங்கள். அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை அங்கு ஜெயந்தியைக் கொண்டாடட்டும்” என்பார். “அவர்கள் உங்கள் பஜனையில் தலையிட வேண்டாம். நீங்கள் அவர்கள் ஜெயந்தியில் தலையிட வேண்டாம்” என்பார். 8 வது பஜனை முடியவும். நண்பர்கள் ‘இந்த மாதாந்திர பஜனை ஆரம்பித்ததே, சிவகாசி ஜெயந்தியை நல்ல விதமாக அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பதற் காகத் தான், எனவே என்ன செய்வோம்” என்று கேட்டார்கள். “நீங்கள் ஜெயந்தியில் தலையிட வேண்டாம், அவர்கள் உங்கள் பஜனையில் தலையிட வேண்டாம் என்று ஸ்வாமி. உத்திரவிட்டிருப்பதைச் சொன்னேன். “சிவகாசி ஜெயந்திக்கு அப்போது, பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியைக் கூட்டி வருவோம்” என்றார்கள். பார்த்தசாரதி. “அவ்வளவு பெரிய பதவியிலிருப்பவர்களைக் கூட்டி வந்தால், சமாளிப்பதுக் கஷ்டம். அவரை, இவரை ஏன் கூட்டி வரவேண்டும், நம் ஸ்வாமியையே அனைவரும் போய்க் கூட்டி வருவோம்” என்றார். சாதனா (மதுரை, சந்திரசேகரன்-மல்லிகா மகள்) திருமணம் முடிந்த மூன்றாவது நாள் ஸ்வாமியிடம் போவது என்று முடிவு செய்தோம். குறிப்பிட்டபடி. அதிகாலையிலேயே சிவகாசியிலிருந்து, சந்திரபிரகாஷின் காரில், சந்திரபிரகாஷ், ஸ்ரீவில்லிப்புத்தூர் பெருமாளப்பன். ஞானகிரி கணேசன் ஆகியோர், என்னையும், பார்த்தசாரதியையும், கூட்டிப் போக, மதுரை வந்து விட்டார்கள். மதியம் 1.30 மணி சுமாருக்கு. திருவண்ணாமலை போய் சேர்ந்து, மாலைகள் வாங்கிக்கொண்டு ஸ்வாமியிடம் போனோம்.
வீட்டுக் கதவைத் தட்டவுமே, ஸ்வாமி திறந்து கொண்டு, நரசிம்ம அவதாரம் எடுத்தாற் போல், பெரிய, பெரிய step களாக வைத்து மிக வேகமாக வந்து கதவைத் திறந்தார். கொண்டியைத் திறக்கும் போதே, “நண்பர்களே, நீங்கள் இந்தப் பிச்சைக்காரனுக்கு ரொம்ப சேவை செய்து விட்டீர்கள், போதும், இனிமேல் ஜெயந்தியும் வேண்டாம், பஜனையும் வேண்டாம், உடனே நிறுத்துங்கள் என்று ரொம்ப சத்தமாக” உத்திரவு இட்டார். (Friends, you have done lot of service to this Beggar in celebrating the Jayanthi and the Bhajans; Now stop them; No more Jayanthi, No more Bhajans, You have already done a lot) என்று கூறிக் கொண்டே கதவைத் திறந்தார். ஸ்வாமி சிவகாசி வந்தால், என்ன, என்ன செய்ய வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டு போன எங்களுக்கு, ஸ்வாமியின் இந்த முடிவு திடுக்கிட வைத்தது. உள்ளே ஹாலுக்குள் எங்களை அழைத்துப் போனார். ஸ்வாமி. ஹாலிற்குள் போய் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். ஸ்வாமி ரொம்ப உரத்த குரலில், “நீங்கள் எல்லோரும் இந்தப் பிச்சைக்காரனுடன் மிக்கத் தொடர்புடைய நண்பர்கள், இந்தப் பிச்சைக்காரன் திருவண்ணாமலையை விட்டு வெளியே போவதில்லை என்று உங்களுக்கு ரொம்ப நன்றாகத் தெரியும், அப்படியிருக்கும் போது. என்ன நினைத்துக் கொண்டு இந்தப் பிச்சைக்காரனை இவ்வளவு பேரும் சேர்ந்து கூப்பிட வந்தீர்கள்? ” என்றார். நாங்கள் வரும் விபரத்தை, பஜனையில் கலந்து கொண்ட யாரோ, தபாலில் ஸ்வாமிக்கு எழுதினார்களாம். எங்கள் யார் முகத்திலும், அதிர்ச்சி காரணமாக ஈயாடவில்லை. நாங்கள் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு யாரோ ஒரு அன்பர் ஸ்வாமியை தரிசிக்க வந்தவர், பழத் தட்டுடன் ஸ்வாமியைப் பார்க்க ஹாலில் ஏற்கனவே அமர்ந்திருந்தார். அவர் ஸ்வாமி போடும் சத்தத்தைப் பார்த்து, சொல்லாமல் கொள்ளாமல் பழத் தட்டைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார். சிறிது நேரம் கழித்து. நாங்கள் யார், யார் எங்கே. எங்கே அமர வேண்டும் என்று ஸ்வாமி இடத்தைக் காட்டி அமரச் சொன்னார். பார்த்தசாரதிக்கு அமர இடம் இல்லை. எனவே அவர் நடை பாதை ரூமில் அமர்த்தப் பட்டார்.
ஸ்வாமி. “இந்தப் பிச்சைக்காரனை சிவகாசி ஜெயந்திக்கு கூப்பிட வேண்டும் என்று யோசனை சொன்னது யார்? ” என்று கேட்டார். யாரும் வாயேத் திறக்கவில்லை. பார்த்தசாரதி. ” நான்தான்” என்றார். ஸ்வாமி அவரை “உள்ளே வா, நண்பா” என்று சொல்லி, தன் அருகில் அமர்த்திக் கொண்டார். ஸ்வாமி சிரிக்க ஆரம்பித்தார். ஸ்வாமி, “பார்த்தசாரதியும், ஜெனார்தனும் இந்தக் கூட்டத்தில் பணம் இல்லாதவர்கள். இவர்கள் நமக்கு ஆலோசனை கூறுவதா என்று இந்தக் குரூப்பில் உள்ள பணக்காரர்கள், இந்த நல்ல பணியை நொறுக்கிவிட்டார்கள். எனவே நண்பர்களே மேற்கொண்டு சிவகாசியில் ஜெயந்தியும் வேண்டாம், பஜனையும் வேண்டாம்” என்றார். பார்த்தசாரதியைப் பார்த்து ஸ்வாமி, “பஜைனையை நிறுத்தியது பற்றி, என்ன நினைக்கிறாய் பார்த்தசாரதி ” என்றார். அதற்கு பார்த்தசாரதி, * பெரிய விடுதலை கிடைத்த மாதிரி இருக்கிறது” என்றார். ஸ்வாமி, “ஒரு மனிதன் விடுதலை பெற. ஏழு லோகத்தையும் தியாகம் செய்யலாம் என்கிறார்கள். இந்தப் பஜனை ஒரு பொருட்டா?” என்றார். அன்று ஸ்வாமி தின்பண்டங்கள் எல்லோருக்கும் கொடுத்தது போல, என்றைக்கும் கொடுத்தது கிடையாது. சுவற்றில் தொங்கும் துணிப் பைகளுக்குள் கை விட்டு. நிறைய பொட்டலங்களை எடுத்து. காரச்சேவு, மிக்சர், பக்கோடா, கடலை என்று சுமார் 50 பொட்டலங்கள் பிரிக்கப்பட்டன. எல்லாமே மிகவும் புது பதார்த்தங்களாக இருந்தன. கணேச மச்சான், “இராஜதுரை நாடார் நினைவாலயத்தில் தானே பஜனையை நிறுத்தினீர்கள், இனிமேல் மாதா மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில், என் வீட்டில் வைத்து அதே மாதிரி பஜனை செய்யட்டுமா?” என்றார். ஸ்வாமி, “இந்தப் பிச்சைக்காரன் மேல் சிறிதளவாவது மதிப்பும். மரியாதையும் இருந்தால், உடனே பஜனை மற்றும் ஜெயந்தியை நிறுத்துங்கள்” என்றார். ஸ்வாமி தன் கையாலே நிறைய ஆப்பிள் பழங்களை அறுத்து எங்களுக்குக் கொடுத்தார். என் அருகே வந்து ஆப்பிள்கள் துண்டைக் கொடுக்கும் போது அன்பு வழிய, “பஜனை நிறுத்தப்பட்டதன் உண்மைக் காரணத்தை தெரிந்து கொண்டாயா, ஜெனார்தன்” என்று கேட்டார். ஸ்வாமி கேட்கிறாரே என்பதற்காக ” ஆம் ஸ்வாமி” என்றேன். (உண்மையில் இன்று வரை பஜனை ஏன் நிறுத்தப் பட்டது என்பதற்கான நிஜக் காரணம் எனக்குத் தெரியாது.) கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷனின், தலைமை நிர்வாகியாக இராஜகோபால் இருந்தார். கிருஷ்ணஜியுடன். தியாசபிகல் சொசைட்டியிலிருந்து வெளியேறியவர், இந்த இராஜகோபால்.
தீர்க்கதரிசியான கிருஷ்ணஜிக்கு சீடராக இவரை அம்மா, அன்னி பெசண்ட் தேர்ந்தெடுத்திருந்தார். கிருஷ்ணஜி உலகம் பூராவும் சுற்றி பேசி வருவார். அவருடைய சுற்றுப் பயண திட்டத்தை தீர்மானிப்பது. ஏற்பாடு செய்வது, கிருஷ்ணஜியின் பேச்சுக்களை புஸ்தகமாக வெளியீடுவது மற்ற நிர்வாகப் பொறுப்புகளை நல்ல முறையில் செய்து வந்தவர், இந்த இராஜகோபால். சட்டப் பூர்வமாக, தன்னுடைய உடமைகள் பூராவற்றிற்கும், இராஜகோபாலை வாரிசாக நியமித்தார், கிருஷ்ணஜி. அது சமயம் கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷனுக்கு பல கோடிக் கணக்கில் சொத்து இருந்தது. ஒரு கட்டத்தில் கிருஷ்ணஜிக்கும், இராஜகோபாலிற்கும் கருத்து வேறுபாடு வந்து, பவுண்டேஷன் நிர்வாகத்தை ஆக்கிரமித்துக் கொண்டார். இராஜகோபால் கிருஷ்ணஜியின் அன்றாட வாழ்க்கைச் செலவிற்கும், பயணச் செலவிற்கும் கூட பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டார். கிருஷ்ணமூர்த்தியின் தோழர்களுக்கு இது மிக்க அதிர்ச்சியாக இருந்தது. ஒரே குழப்பமாகவும் இருந்தது. கிருஷ்ணமூர்த்தியிடம் பற்றுக் கொண்ட, ஆரம்ப நாட்களில் இருந்து பவுண்டேஷனிற்கு சேவை செய்து வந்த. இரண்டு தோழிகள் இந்த குழப்பம் குறித்து பரிமாறிக் கொண்ட தபாலை. Mary Lutyens ன் The Years Of Fulfilment என்ற புஸ்தகத்திலிருந்து ஸ்வாமி படிக்கச் சொன்னார்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இராஜகோபால். ஸ்டாடிலிருந்து. அம்ஸ்டர்டாம் போனார். அங்கு அனேக்கே கோர்ன்டார்பரை சந்தித்து. தன்னுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் பரிமாறிக்கொண்டார். அனேக்கே, ஓமென் காலத்திலிருந்து. கிருஷ்ணஜி மற்றும் இராஜகோபாலின் வேலைகளில் உதவியாக இருந்து வந்திருக்கிறார். அக்டோபர் 15ந் தேதி, இந்த சந்திப்பைப் பற்றி, அனேக்கே, டோரிஸ் ப்ராட் என்ற தன்னுடைய தோழிக்கு கீழ்க்கண்டவாறு தபால் எழுதினார்:
இது வரை நானும் ராஜாவும் சந்தித்து பேசிய சந்திப்புகளில், இந்த அம்ஸ்டர்டாமில் சந்தித்து பேசியது மாதிரி புதுமையான, அருமையான சந்திப்பு இதுவரை நடந்ததில்லை. இந்த சந்திப்பு, என்னை ஊமையாக்கியது, அதிர வைத்தது, மிக யோசிக்க வைத்தது.
இருந்தாலும், ஒரு பசுமையான உண்மையை என்னால் மறுக்க முடியாது. கிருஷ்ணஜி, ஒரு வினோதமான வஸ்து, சுழன்று எரியும் நெருப்புப் போல, அதன் மிக அருகில் நெருங்க முயற்சிப்பவர்கள், சுடப்படுவார்கள். அவருடைய அவதார மகிமையே இதுவாக இருக்கலாம்.
எந்த வித எண்ண ஓட்டங்களும் மனதில் இல்லாமல். ராஜாவுடன், நட்புணர்வுடன், பேசியதை யோசித்துப் பார்த்தால். அவர் கூறுவதெல்லாம். உண்மை என்றே தோன்றுகிறது.
ராஜாவுடைய அறிவு, யாரும் எண்ணிப் பார்க்க முடியாத அளவு, உயர்ந்தது. மிகவும் போற்றுதற்குரியது. விசாலமானது. அவர் மிகவும் தைரியசாலி. என்னைப் பொறுத்த வரையில் உண்மை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே ஒரு ஆர்வம் மட்டுமே என்னிடம் இருந்தது. நாம் அனைவரும், மலை உச்சியின் விளிம்பில், கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் நடந்து கொண்டிருக்கிறோம். நீயும் ராஜகோபாலும் சந்திக்க வேண்டும், தற்சமயம் இருவரிடையே இருக்கும் நட்பிற்கு பங்கம் வராமல், ஆம், இல்லை என்று சொல்லாமல், எல்லாவற்றையும் பற்றி, மிக விரிவாக உங்கள் பேச்சு தொடர வேண்டும் என்று நம்பி, பிரார்த்திக்கிறேன். நாம் அனைவரும் அறிந்திருக்கிறபடி, கிருஷ்ணஜி, யாரை வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், தள்ளி வைப்பார். உண்மை என்னவென்றால், அவருடன் எப்படி உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென்பதை முடிவு செய்ய வேண்டியது, நம் கையில் தான் இருக்கிறது. நாம் ஒருவர் கழுத்தை, ஒருவர் ஒடித்துக் கொண்டாலும், எரிந்து சாம்பலானாலும், அது நம்முடைய சொந்த பொறுப்பாகத் தான் இருக்கும். கிருஷ்ணஜி அதைக் கண்டு கொள்ள மாட்டார். நம்மை அவர் ஒருவருடன் ஒருவர் மோத வைப்பார், நாம் இருப்பதே அதற்காகத் தானே. கிருஷ்ணஜியின் வெளித் தோற்றம். முற்றிலும் மாறுபாடுடையதாகக் காணப்பட்டாலும், அவர் பேசுவதெல்லாம் உண்மை, சத்தியத்தை தவிர வேறில்லை. ஒரு வால் நட்சத்திரம், பற்றி எரியும் தீக் கனல் இவற்றைச் சுற்றி, எப்பவும் புகை இருப்பது இயற்கை தானே.
என்றாவது ஒரு நாள், நான் அவரை விட்டு வெகு தூரம் விலகி, அவர் புஸ்தகங்களை படித்து மகிழ்வுடன் வாழ்ந்து வரும் நண்பர்களுடன் சேருவேன் என்ற ஆசை என்னுள் கனன்று கொண்டு இருக்கிறது.
அனேக்கே, இன்று கேயுனுடைய மிக நெருக்கமானவர்களில் ஒருவர்.
அவர் தள்ளப்படவும் இல்லை, சுடப்படவும் இல்லை. கிருஷ்ணமூர்த்தி யாரையும் தள்ளுவதில்லை. ஆனால் அவரின் நண்பர்கள் அவரைத் தள்ளிப் போகிறார்கள்.யாராவது. அவரை தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க கருதினால், அவருக்கு தான் இல்லாவிட்டால் காரியங்கள் நடக்காது என்று நினைக்க ஆரம்பித்திருந்தால், அவருடைய பற்றின்மையை அவர் காட்ட ஆரம்பிக்கவும். இவர்களுக்கு LD60T வருத்தம் ஏற்படுகிறது. தாங்கள் மாற்றப் படுவதாக கருத ஆரம்பிக்கிறார்கள். மனம் உடைந்து, பொறாமை வாய்ப்பட்டு, அவர்கள் கிருஷ்ணஜியை விட்டு விலக ஆரம்பிப்பார்கள். நாம் செய்த கைங்கர்யத்திற்காக, கிருஷ்ணஜி நன்றியுள்ளவராக இருப்பார் என்று யாரும் கருதினால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். தன் வாழ்க்கையை தியாகம் செய்து. தான் சார்ந்து வரும் உண்மைக்காக வேலை பார்ப்பதற்கு வருபவர்களை, அவர் வரவேற்பார். தனிப்பட்ட முறையில் தனக்கு கைங்கர்யம் செய்பவர்களை, அவர் ஊக்குவிப்பதே இல்லை. யாராவது, புது நண்பர்கள், புது உற்சாகத்துடன் வந்து இந்த வேலையில் ஈடுபட்டால், அவர்களை, கிருஷ்ணஜி, மிக ஊக்குவிப்பார். இதைப் பார்க்கும், பழைய நண்பர்கள், தங்களை அவர் கைவிட்டு விட்டதாகக் கருதுவார்கள். அவரை யாராலும் கட்டுப் படுத்த முடியாது. எந்த ஒரு பொருளாலுமோ, புகழ்ந்து பேசுவதாலோ, யாரும் அவரை வாங்கி விட முடியாது.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஸ்வாமி பிறகு, ” யார் காரில் வந்தீர்கள் ” என்றார். “சந்திரப்பிரகாஷ் காரில்” என்றோம். ” ஐயோ, நிறையச் செலவாகுமே” என்றார். “நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்” என்றோம். பிறகு ஸ்வாமி அனைவரையும் பார்த்து, “நண்பர்களே, இன்னம் 10 நிமிடங்களில் இந்தப் பிச்சைக்காரன், ஜெனார்தனை பெங்களூருக்குப் போக விடை கொடுத்தனுப்பப் போகிறான், இந்த பஜனையைப் பற்றியோ, ஜெயந்தியைப் பற்றியோ யாரும் ஏதும் பேச வேண்டுமென்றால், அவன் போவதற்குள் பேசுங்கள், ஜெனார்தனை அனுப்பிய பிறகு, இந்தப் பிரச்சினை பற்றி இந்தப் பிச்சைக்காரன் யாரிடமும் பேச மாட்டான்” என்றார். கணேச மச்சான் பேச ஆரம்பித்தார். வார்த்தைகள் சரியாக வெளி வரவில்லை. “குரு மகராஜ். நாங்கள் எந்த விதத் தப்பும் பண்ணாத போது. ரொம்ப நன்றாக நடந்த பஜைனையை ஏன் நிற்ப்பாட்டச் சொல்கிறீர்கள், காரணத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றார். ஸ்வாமி அவரைப் பார்த்து, “இந்தப் பிச்சைக்காரன் பார்த்தசாரதியிடம், என்ன நினைக்கிறாய் பார்த்தசாரதி” என்று கேட்டான். அதற்கு அவன், விடுதலை கிடைத்தாற் போல என்றான். ஜெனார்தனிடம் ஜெயந்தியை நிறுத்தியதற்கு உண்மைக் காரணத்தைத் தெரிந்து கொண்டாயா என்று கேட்டான். அவன் தெரிந்து கொண்டேன் என்றான். உனக்கு வரும் சந்தேகங்களுக்கு, விடை வேண்டுமென்றால், இங்கிருந்து போன பிறகு. இந்த இரு நண்பர்களிடமும் விசாரித்துத் தெரிந்து கொள்* என்றார். எனக்கு ஸ்வாமி விடை கொடுக்க, பெங்களூர் வந்து சேர்ந்தேன். மறுநாள் பெங்களூரிலிருந்து சிவகாசிக்கு பார்த்தசாரதியுடன் பேசினேன். என்னை அனுப்பிய சிறிது நேரத்தில், அவர்களையும் ஸ்வாமி விடை
கொடுத்தனுப்பி விட்டாராம். இன்றும் பஜனையில் கலந்து கொண்ட பக்தர்கள் என்னைப் பார்க்கும் போது, “சிவகாசியில் எவ்வளவு அருமையாக பஜனை செய்து வந்தோம், இப்படி திடீரென நிறுத்திவிட்டீர்களே * என வருத்தப்படுவார்கள்.

One Comment on “SP ஜெனார்த்தனன்/ உண்மையுடன் ஒருவாழ்வு”

  1. யோகி ஸ்ரீராம் சூரத் குமார் எனப்படும்
    விசிறி ஸ்வாமிகள் 1984ல் நான் திருவண்ணாமலையில் பணிபுரிந்த போது அவரைப்பார்க்கச்சென்றேன்.
    உடனே அவர் என்னைப்பார்க்க வராதே அண்ணாமலையானை ப்போய்ப்பார்.
    அதன்பிறகு 1985ல் சந்திர கிரகணம் முடிந்து அதிகாலை சுமாராக 3/45மணிக்கு அண்ணாமலையார் கோயிலுக்கு ப்போனேன். விசிறி ஸ்வாமிகள் கோயிலில் இருந்த் இறங்கி வர நான் உள்ளே போக வேண்டும், அவரைப்பார்த்தததும் நின்ற உடன் நேரே அண்ணாமலையைப்
    போய்ப்பார் என்றபடியே இறங்கிவிட்டார்.என்னால் மறக்க முடியாத நிலை இது

Rangarajan. S.v. உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன