நாபா.மீரா/சம்போகம்

ஏண்டி எதையோ பறிகொடுத்தா மாதிரி எப்பவுமே இறுக்கமாகவே இருக்க… கேட்ட தோழி பாமாவுக்கு பதில் கூறாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள் உமா.
பாமா தோள்கள் பிடித்து உலுக்க… ஆங்… என்னடி கேட்ட..,
சரியாப் போச்சு போ…உன் பிரச்சினைதான் என்ன…
என்னத்தைச் சொல்ல… பொறந்த வீட்டுல சாப்பாட்டுக்கே கஷ்டம்.ஆனாலும், அன்புக்கும், அரவணைப்புக்கும் பஞ்சமில்லாமத்தான் இருந்துச்சு.
இங்க புகுந்த வீட்டுல வகை வகையான சாப்பாடு,துணிமணிக்குப் பஞ்சமில்லை. ஆனா, அனுசரணையே இல்லாத மாமியார்…இருட்டுல தன் தேவையைத் தீர்த்துக்குற புருஷன்.
உடம்பு மரத்தே போச்சு..வாழ்க்கையே வெறுத்துப் போச்சுடி பாமா….மயங்கிச் சரிந்த உமாவின் நாடி பிடித்துப் பார்த்த நர்ஸ் பாமா உடனடியாக செயல்பட்டாள்.
ருக்மணி பேறுகால மருத்துவமனை.
மிஸ்டர் சங்கர்.சாரி டு ஸே..உங்க மனைவி உமாவோட கர்ப்பம் கலைஞ்சிடுச்சு. ரொம்ப வீக்கா இருக்காங்க.
கவலையுடன் கிளம்ப எத்தனித்தவனிடம், உடலும்,மனசும் சங்கமிக்கிற சம்போகம்தான் ஆரோக்கியமான கருவை அறுவடை செய்யும்.
ஆல் தி பெஸ்ட்.

ஸ்ரீராம் /இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளே.. – விருட்சம் நாளிதழ்

2 Comments on “நாபா.மீரா/சம்போகம்”

மரு. ச. கந்தசாமி உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன