பி. ஆர்.கிரிஜா/ பரிவு

சுமதி ஒரு தனியார் அலுவலகத்தில் மேலதிகாரி. எப்போதும் கடு கடுவென்று முகத்தை வைத்திருப்பாள். வேலை அபாரம். எல்லோரும் அவளைப் போல் திறமையாக வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பாள். இதனால் சக ஊழியர்களுக்கு அவளைப் பிடிக்காமல் போனது.
ஒரு நாள் துப்புரவு பணியாளர் தாமதமாக வந்தார். “போச்சுடா…. இன்று அவர் வேலைக்கு வேட்டு வைத்து விடுவாள்” என்று மற்றவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
” என்ன கமலா, ஏன் இந்த தாமதம்? குரலில் கடுமை. ” என் கணவருக்கு போன மாதம் நடந்த விபத்தில் இரண்டு கால்களையும் வெட்டி எடுத்தார்கள். அவரைக் குளிப்பாட்டி தயார் செய்து விட்டு வந்தேன். சற்றே தாமதமாகி விட்டது. மன்னியுங்கள்” என்றாள்.
என்ன ஆச்சர்யம் ! மறு பேச்சு பேசாமல் “சரி கமலா, நீ வேலய முடிச்சுட்டு என்ன வந்து பாரு.. உன் கணவருக்கு சக்கர நாற்காலி வாங்கித் தரேன். அப்படியே நம்ம கம்பெனியில வேலையும் போட்டுத் தரேன். நாளை அவரைக் கூட்டிக் கொண்டு வா” என்றாள் சுமதி கனிவுடன்.
அவளின் இன்னொரு முகத்தைப் பார்த்து சக ஊழியர்கள் வாயடைத்துப் போயினர்.

அனுராதா ஜெயசங்கர்/நீல நெற்றிச்சுட்டி – விருட்சம் நாளிதழ்

One Comment on “பி. ஆர்.கிரிஜா/ பரிவு”

Comments are closed.