கரந்தை இந்து /நீலவண்ண லிப்ஸ்டிக்

“ராணி கொஞ்சம் இங்கே வாயேன்” என்று அழைத்தான் அவள் கணவன் செந்தில்.
” ஏங்க காலை நேரத்தில் நான் வேலை செய்யணுமா, வேண்டாமா? எதுக்குக் கூப்பிட்டீங்க ” என்ற கேள்வியோடு அவன் முன் வந்தாள்.
“என் கூட பள்ளியில் படித்த சந்துரு திருநங்கை சாராவா மாறி இங்கே வந்திருக்கான் என்று சொல்லி இருக்கேன் தானே.”
“ஆமாம் அதுக்கென்ன இப்போ?”
“அவன் தன்னையே எவ்வளவு அழகா வரைந்திருக்கான் பாரு “.
“ஆஹா, அதி அற்புதமா தெய்வீகமா இருக்கு. கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் மாதிரி தோணுதுங்க. ஆனால் ஏன் உதட்டுக்கு நீலக் கலர் லிப்ஸ்டிக் போட்டிருக்கார் சம்பந்தமே இல்லாம” என்றாள் .
“நானும் இதே கேள்வியைக் கேட்டேன் மா. அவன் என்ன சொன்னான் தெரியுமா? “
” அப்படி என்ன தான் சொன்னார்? சீக்கிரம் சொல்லுங்க , சஸ்பென்ஸ் தாங்காது நமக்கு “
“திருநங்கைகளை வெறும் பாலியல் தொழிலாளியா பார்த்து கேவலமா நினைப்பவர்களுக்கு அவர்களின் உதட்டு முத்தம் விஷமாகணும்னு எண்ணத்தில் நீலக்கலர் ” என்றான்.

மரு.ச.கந்தசாமி/வைதேகி காத்திருந்தாள் – விருட்சம் நாளிதழ்

One Comment on “கரந்தை இந்து /நீலவண்ண லிப்ஸ்டிக்”

  1. நன்றாக இருந்தது. திருநங்கை களுக்கும் மனசு உண்டு என்பதை இந்த சிறு கதை சொல்கிறது

Comments are closed.