
புனித பூமியான திருவண்ணாமலையிலா இந்த நிகழ்ச்சி நடந்தது.
பானுமதி நிம்மதி இல்லாமலிருந்தாள்.
ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் ரமண ஆச்ரமத்தில் சில நாட்கள் அவள் தங்குவது வழக்கம்.
ஆனால் பேப்பரில் வந்து விழுந்த இந்தக் கொடூர செய்தியை அறிந்து திருவண்ணாமலையில் இருக்க வேண்டாமென்று தோன்றியது.
சில கயவர்கள் புனிதா என்ற பெயருள்ள பள்ளியில் படிக்கும் சிறுமியை பாலியல் வன்முறை செய்ததை அறிந்து துடித்துடித்துப் போய்விட்டாள் பானுமதி. அவள் அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் சென்னைக்குப் பஸ் பிடிக்க சென்று விட்டாள். போகிற வழியில் யோகி ராம் சுரத் குமார் ஆசிரமத்திற்குச் சென்று அவர் உருவச்சிலை முன் நின்று “இது நியாயமா?” என்று கேட்டாள்.
