
தினேஷ் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு படிப்பை விட கிடார் வாசிப்பதில் அதிக நாட்டம். அவன் கல்லூரியின் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று பரிசுகள் வாங்குவான்.
இந்தப் படிப்பும், இசையும் இவனுக்கு நல்ல வேலை வாங்கிக் கொடுக்குமா என்று அவன் பெற்றோர்களுக்கு பெருங் கவலை. அடுத்த நாள் கல்லூரி கலை நிகழ்ச்சியில் தினேஷின் சோலோ புரோகிராம். மற்ற கல்லூரியிலிருந்தும் மாணவர்கள் வந்ததால் அரங்கம் நிரம்பி வழிந்தது. தினேஷ் அருமையாக ஒரு மணி நேரம் இன்னிசை பொழிந்தான். இசை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் சோமசேகர் வந்திருந்தார். தினேஷ் புரோகிராம் முடிந்தவுடன் அவையில் கரகோஷம். சோமசேகர் எழுந்து நின்று கை தட்டினார். அவனைப் பாராட்டிப் பேசி விட்டு, தினேஷை தன்னுடைய அடுத்த படத்திற்கு துணை இசை அமைப்பாளராக அறிவித்தார். எல்லோரும் வாயடைத்துப் போயினர்.
தினேஷ் அவருக்கு நன்றி கூறி அவர் கொடுத்த பரிசை வாங்கிக் கொண்டு கீழே இறங்கினான்.
தினேஷின் பெற்றோர்கள் அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றனர்.

One Comment on “பி. ஆர்.கிரிஜா/இசை ஆர்வம்”
Comments are closed.