
கோவிலுக்கருகே குடியேறினால்
சாமி கும்பிடப்போகிறோம் என
வந்துவிடுகிறார்கள்
கடலோரம் வீடு பார்த்துப் போனால்
பீச்சுக்கு வந்துவிட்டு அப்படியே என்று
சாகடிக்கிறார்கள்
வெளியூர் ஓடிவிடலாம் என்றாலோ
அங்கேயும் புண்ணியத் தலங்கள்,
இயற்கை இம்சைகள் பல்லிளித்து நிற்கின்றன
ஒரு ஷாப்பிங் மால் கடைத்தெரு ஓட்டல்
பூங்கா அருங்காட்சியகம் பள்ளிக்கூடம்
எங்காவது துணிந்து வீடு மாற முடிகிறதா?
வாடகை ஆயிரம், ரெண்டாயிரம் அதிகமானால்
பரவாயில்லை சார், ஒரு நூலகம் அருகே
வீடு பார்த்துக் கொடுங்கள்.
