
🏵️
அல்லவை நீக்கி நல்லவை தருவேன்;
கல் என நின்று வெல்வேன்;
வல்லவன் நான் ஒருவனே என்றே;
சொல்லி அடித்தார் கில்லி.
🏵️
பல வேறு சோதனைகள் தாண்டியும்,
பலவாறான ஏச்சையும் பேச்சையும் தாங்கியும்
,எல்லாமே நல்லது நல்லது என்றே,
சொல்லி அடித்தார் கில்லி
🏵️
அரசியல் உலகு இதுவரை அறியாத
வெற்றி, இன்று என் பக்கம்
வாகை சூடுவது நிச்சயம்; என்றே
சொல்லி அடித்தார் கில்லி
🏵️
திரையுலக நாயகன் , மட்டுமல்ல; நான்
தமிழக அரசியல் நாயகனும் நானே
என, அன்றே சொல்லி கொங்கரித்தே;
சொல்லி அடித்தார் கில்லி.
🏵️
தாய் மாமன் சீர் என்றும்,
தாய் வீட்டு சீர் என்றும்,
மகளிர் மனத்தில் இடம் பிடித்தே,
சொல்லி அடித்தார் கில்லி.
