
நல்லது பேசுவார் நாணமும் உடையார்
தல்லென தீமையைத் தள்ளுவர் எண்ணி
ஒல்லென வாழ்வது ஓங்கிடும் நெஞ்சம்
சொல்லி அடித்தார் கில்லி.
******
அறிவுடை மாணவர் ஆற்றலும் சேர்ந்து
நெறியுடன் நடப்பது நேர்மையின் வழியில்
பிறருக்கு நன்மை பயப்பவர் என்றும்
சொல்லி அடித்தார் கில்லி.
*******
இலவசம் தருவேன் என்று இலகுவாய் சொன்னார்
கலவையாய் வாக்குறுதி குவித்தார் மேடையில்
கணக்கிட்டு பார்த்தோம் எதுவும் வரவில்லை
சொல்லி அடித்தார் கில்லி.
*******
