எல்.ரகோத்தமன்/அவள் கவிதை எழுதிக் கொண்டிருந்தாள்!

அவள் எங்கோ
பார்த்துக் கொண்டிருந்தாள்!

அவளை விருட்டென்று
ஒரு பறவை கடந்து சென்றது!

சிதறவில்லை பார்வை !

யாரோ அவளை கூப்பிட்டார்கள்!

விழவில்லை காதில் !

ஜில்லென்ற காற்று வீசியது!

சிலிர்க்கவில்லை மேனி!

தென்னங்கீற்றின் நுனியேறி
விளையாடின அணில்கள்!

துள்ளவில்லை மனம்!

கையசைத்து அழைத்தன
வெண்ணிறப் பூக்கள்

பார்க்கவில்லை கண்கள்!

வழியில் பாதங்களில்
குத்தின முட்கள்!
உணரவில்லை பாதங்கள்!

மேகம் திரண்டு கொட்டியது
மழை!

நனைதலின் சுகம்
தீண்டவில்லை நெஞ்சை!

அவள் எங்கோ பார்த்துக்
கொண்டிருந்தாள்!

இல்லை
அவள் தடங்கலின்றி
மனதின் ஆழத்தில்
ஒரு கவிதை எழுதிக்
கொண்டிருந்தாள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன