அதிரன்/தமிழ்நாட்டு குடிமகன் என்னும் நான்

யார் ஆட்சிக்கு வந்தாலும்
கவலைப்பட மாட்டேன்

தன்மானத்தை அடகு வைத்து
கை நீட்டிக் காசு வாங்குவேன்

என் உரிமையைக் கூட
லஞ்சம் கொடுத்தே பெறுவேன்.

என் கனிமவளத்தை
யார் திருடினாலும்
எனக்கு எந்த  வருத்தமும்மில்லை.

சட்டம் ஒழுங்கு எக்கேடு
கெட்டால் எனக்கென்ன?

பாலியல் வன்கொடுமை
ஆணவக் கொலை
போதை பொருள் நடமாட்டம்
இது எல்லாம் எனக்கு
செய்தி மட்டுமே

எல்லாம் ஓசியில் கிடைக்கையில்
எனக்கென்ன கவலை.

இந்த நான் இருக்கும் வரை
இன்று ஒருவர்
நாளை மற்றொருவர்
என் முதுகில்

எந்த சீமானும்
என்னைத்
திருத்த முடியாது

One Comment on “அதிரன்/தமிழ்நாட்டு குடிமகன் என்னும் நான்”

  1. இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது. எளிமை, யதார்த்தம் ,சொற்சிக்கனம். வாழ்த்துக்கள் திரு. அதிரன்
    லாவண்யா சத்யநாதன்

Sathyanath Ramanathan உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன